ஹோம் /தஞ்சாவூர் /

Thanjavur | ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000 சம்பளத்தில் வேலை - விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

Thanjavur | ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000 சம்பளத்தில் வேலை - விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thanjavur, India

  தஞ்சாவூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் 43,000 ரூபாய் சம்பளத்தில் காலிபணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது. மேலும், இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

  தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் நிறுவனம் சார்பில் வெட்னரி கன்சல்டன்ட் புதிய பணிக்கு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. மேலும், இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை அனுப்புமாறு அறிவித்துள்ளது.

  இதற்கு தகுதியாக பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் முடித்து கணினி குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும். இரு சக்கர வாகன லைசசென்ஸ் வைத்திருக்க வேண்டும். நேர் முகத் தேர்வு மூலம் செய்ய செய்யப்படுவார்கள்.

  பணியிடம் : தஞ்சாவூர், பணியின் பெயர்: வெட்னரி கன்சல்டன்ட், காலிடங்கள் 3, சம்பளம் மாதம்: 43,000 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  நேர்முகத் தேர்வு நடக்கும் இடம்: நிர்வாக அலுவலகம், தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் நிறுவனம், தஞ்சாவூர்-06.

  நேர்முக தேர்வு வரும் 11ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் தொடர்புகளுக்கு 04362-255379, 8122665578 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Thanjavur