தமிழ் மீது உள்ள அதீத பற்றால் விவசாயி இளங்கோவன், சின்னார் என்ற நெல் ரகத்திலும், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்திலும், 50 அடி நீளமும், 45 அடி அகலமும் கொண்ட திருவள்ளுவரின் உருவ அமைப்பில் விளைநிலத்தில் நடவு செய்துள்ளார். இதை கழுகு பார்வையில் பார்க்கும்போது திருவள்ளுவரின் உருவமைப்பு தெரிவது சிறப்பம்சமாகும்.
இது பற்றி தகவல் அறிந்த அரசு தலைமை கொறடா கோவி செழியன், விவசாயிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வித்யா, வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா, மலையப்பநல்லூர் உதவி வேளாண்மை அலுவலர் சாத்தாவு ஆகியோர் மற்றும் மேலும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு விவசாயி இளங்கோவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திருவள்ளுவர் வடிவில் நடவு
இதுகுறித்து மேலும் விவசாயி இளங்கோவன் கூறியதாவது, ‘நான் பத்து வருடங்களுக்கு மேலாக இந்த இயற்கை விவசாயத்தை செய்து வருகிறேன். திருவள்ளுவர் எழுதிய மொத்த குறளில் 11 குறள்களில் இயற்கை விவசாயத்தைப் பற்றி கூறியுள்ளார்.

திருவள்ளுவர் வடிவில் நடவு
அந்த குறள்களின் தாக்கத்தால் தான் நான் திருவள்ளுவர் உருவத்தில் விவசாயம் செய்தேன் என மகிழ்ச்சியாக கூறினார். மேலும் இந்த உருவ அமைப்பினை ஏற்படுத்துவதற்கு தனி ஆளாக நான் மட்டும் ஐந்து நாட்களாக இந்த நடவு முறையினை செய்தேன்.
இயற்கை விவசாயத்தை அனைவரும் செய்ய வேண்டும். இயற்கை உணவுகளை அனைவரும் உண்ண வேண்டும் என்பதே எனது அடிப்படை நோக்கமாக இருக்கிறது. மேலும் பிற்காலத்தில் நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை நட உள்ளேன் என கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.