தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே மண்டலக்கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் கபாடி போட்டி நடத்தப்படுகிறது. அதே போன்று இந்த ஆண்டு வைத்த கபாடி போட்டியில் சற்று வித்யாசமான முறையில் முன்னாள் கபாடி வீரர்களுக்கு மறுபடியும் களம்இறங்க வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் 38 வயதுக்கு மேலே உள்ள ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கபாடி போட்டி நடைபெற்றது.
இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சிஉள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள முன்னாள்கபாடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.நுழைவு கட்டணமாக ரூ- 300 பெற பெற்ற நிலையில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
பரிசு தொகை:
முதல் பரிசு ரூ-30,000 இரண்டாம் பரிசு ரூ- 20,000 மூன்றாம் பரிசாக ரூ-15,000 நான்காம் பரிசு ரூ-10,000,ஆறுதல் பரிசு ரூ-5,000 சிறப்பு பரிசு ரூ-10,000 ஆட்ட நாயகன் பரிசு ரூ-10,000,சுழற்கோப்பை என வீரர்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்கியுள்ளனர்.
தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் 40,50 வயதை கடந்தவர்களும் கூட போட்டிகளில் பங்கேற்று நாங்களும் முன்னாள் வீரர்கள் தான் என்று நிருபிக்கும் வகையில் சிறப்பாக களத்தில் அணல் பறக்க ஆடினர்.
போட்டியில் முதல் பரிசை திருவாரூர் மாவட்டம் வடுவூர் அணி பெற்றது.இரண்டாம் பரிசை தஞ்சாவூர் ஸ்போர்ட்ஸ் கிளப் பெற்றது, மூன்றாம் பரிசை ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தகுடியும், நான்காம் பரிசை ஐம்பது மேல் நகரம் அணியும் பெற்றனர். மேலும் வெற்றி பெற்றஅனைத்து அணிக்கும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கானோர் இப்போட்டியை ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur