Home /thanjavur /

1,500 ஆண்டுகள் பழமையான தஞ்சாவூர் பரிதியப்பர் கோவில் வரலாறு தெரியுமா?

1,500 ஆண்டுகள் பழமையான தஞ்சாவூர் பரிதியப்பர் கோவில் வரலாறு தெரியுமா?

தஞ்சை

தஞ்சை பரிதியப்பர் கோவில்

தஞ்சாவூர் பரிதிநியமம் பரிதியப்பர் கோவிலில் வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள மேலஉளூர் கிராமம் அருகே உள்ள பரிதிநியமம் பரிதியப்பர் கோவில் (பாஸ்கரேசுவரர் கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 101-வது சிவத்தலமாகும். இக்கோயில் பருத்தியப்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
1,500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயிலின் சிறப்பை இச்சிறப்பு தொகுப்பில் காணலாம்.

இக்கோயிலின் தல வரலாறு:

பரிதி என்று அழைக்கப்படும் சூரியன் கொடிய நோயினால் பாதிக்கப்படுகிறான். நோயிலிருந்து தன்னை காக்க சிவனிடம் வேண்ட இத்தலம் வந்து தீர்த்தம் உண்டாக்கி, சிவலிங்கம் அமைத்து தன்னை வழிபட்டால் நோய் விலகும் என்கிறார் சிவன். சூரியனும் அதன்படி செய்ய, அவனது நோய் நீங்கியது. இதனால் இங்குள்ள இறைவன் பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

இத்தலத்திற்கு இன்னொரு வரலாறும் உண்டு. ராமபிரானின் முன்னோர்களான சூரிய குலத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தி, வயதான காலத்தில் மகனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சிவத்தலங்களை தரிசிக்க புறப்பட்டான். அப்போது இந்த இடத்திற்கு வந்ததும் அசதியின் காரணமாக இளைப்பாறினான்.

குதிரைச்சேவகன் குதிரைக்கு புல் சேகரித்து கொண்டிருந்தான். புல்லுக்காக பூமியை தோண்டியபோது, அவன் கையிலிருந்த ஆயுதம் சூரியனால் அமைக்கப்பட்டு, பூமிக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட்டது. உடனே லிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. இதனை அறிந்த மன்னன் அந்த இடத்தை தோண்டுமாறு உத்தரவிட்டான். உள்ளிருந்து சூரிய லிங்கம் வெளிப்பட்டது. அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபட்டான். இதை நினைவு படுத்தும் வகையில் இன்றும் கூட சிவலிங்கத்தில் ரத்த வடு உள்ளது.

லிங்கம் இந்த இடத்திற்கு எப்படி வந்தது என்பதை ஒரு முனிவர் மூலம் அறிந்து, அந்த இடத்தில் கோயில் கட்டினான். சூரியனால் அமைக்கப்பட்ட லிங்கம் சூரிய குல மன்னனால் வெளி உலகிற்கு தெரிய வந்தது. இந்த லிங்கத்திற்கு சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18, 19, 20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறான்.

இந்த சிவாலயம் குறித்து பேசிய அர்ச்சகர், ‘வாராந்திர விஷேச நாட்களாக ஞாயிறு தோறும் சிறப்பு பூஜைகள் நடக்கும். வருடாந்திர விஷேச நாட்களாக பங்குனி மாதத்தில் பங்குனி உத்திர விழா வெகு விமர்சையாக நடக்கும். மேலும் பிதுர் தோஷம் நீங்க இங்கு வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்றும் கூறினார்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி