Home /thanjavur /

தஞ்சையில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா- 50,000 தலைப்புகளில் புத்தகங்கள்

தஞ்சையில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா- 50,000 தலைப்புகளில் புத்தகங்கள்

தஞ்சாவூர் புத்தகத் திருவிழா

தஞ்சாவூர் புத்தகத் திருவிழா

தஞ்சாவூர் 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.

புத்தகத் திருவிழா என்பது பொது மக்களிடையே புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில்  தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஆண்டுதோறும் நடக்கும் ஒரு முக்கியமான விழாவாகும்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தகத் திருவிழாவானது நடைபெறாத நிலையில் தஞ்சையில் புத்தகத் திருவிழா தொடங்கி ஜூலை 25- ம் தேதி வரை நடக்கிறது.

தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடந்த இந்த புத்தகத் திருவிழாவை தென்னிந்திய நூல் பதிப்பக சங்கம் சார்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

புத்தகத் திருவிழா முகப்பு


 

மேலும் இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புத்தகக் கடை


பத்து நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவானது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. இதற்காக 110 அரங்குகள் அமைக்கப்பட்டு 50,000 தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறுகின்றன. இதில் காலை 11 மணி முதல் ஒரு மணி வரை கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடக்கிறது.

பத்து நாட்களும் நடக்கும் கலை நிகழ்ச்சிகள்:

விழா நடக்கும் 10 நாட்களிலும் நகைச்சுவை சிந்தனை அரங்கம் நடக்கிறது. இதில் பட்டிமன்ற பேச்சாளர்கள் பலர் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள். மேலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தினமும் தஞ்சை பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

புத்தகக் கடைகள்


சிறப்பு பேருந்து வசதி:

புத்தக விற்பனை ஒருபுறம் இருந்தாலும் அனைவரும் கலந்து கொண்டு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்துவதே இந்த திருவிழாவின் நோக்கமாகும்.

தஞ்சாவூர் அரண்மனைக்குச் செல்லும் கூகுள் மேப்



மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து புத்தகத் திருவிழாவிற்கு வருவதற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து‌ வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த புத்தகத் திருவிழாவில் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி