Home /thanjavur /

ஒரு நாள் மழைக்கே தாங்காத தஞ்சை லோ பிரிட்ஜ்.. தண்டவாளத்தை சாலையாக மக்கள் பயன்படுத்தும் அவலம்..

ஒரு நாள் மழைக்கே தாங்காத தஞ்சை லோ பிரிட்ஜ்.. தண்டவாளத்தை சாலையாக மக்கள் பயன்படுத்தும் அவலம்..

தஞ்சை

தஞ்சை

Thanjavur Low Bridge : தஞ்சை பூக்கார தெருவில் மழை மழைநீர் தேங்குவதால் தண்டவாளத்தை சாலையாக பொதுமக்கள் பயன்படுத்தும் அவலம்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur
தஞ்சாவூர்| பூக்கார தெரு, விளார் செல்லும் சாலையில் Low bridge அமைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் இந்த கீழ் பாலத்தின் வழியில் பல இடங்களுக்கு செல்கின்றனர். தற்போது மழை காலமாக இருப்பதால், இந்த பாலத்தின் கீழ் மழை நீர் அதிக அளவில் நீர் தேங்குவதால் பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

பள்ளி ,கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவரும் தினமும் சென்று வரும் வழியாக இது இருக்கிறது. இந்நிலையில், மழை காலங்களில் சிறிய அளவு மழை பெய்தாலும் மழைநீருடன், கழிவு நீரும் கலப்பதால் துர்நாற்றம் வீசி ‌அதிக அளவில் நீர் தேங்குகிறது.

தஞ்சாவூர் லோ பிரிட்ஜ்


இதற்கு அச்சப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவரும் பாலத்தின் மேலே ரயில் செல்லும் தண்டவாளத்தின்‌ வழியில் கடந்து செல்கின்றனர். மின்சார‌ ரயில் வரும் நேரம் கூட அறியாமல் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் பயண்படுத்துவதால் எந்த நேரமும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது.

தஞ்சாவூர் லோ பிரிட்ஜ்


இந்த Low bridge பாதையையானது தஞ்சை ஓரியண்டல் டவர், மாரியம்மன் கோவில், தொழிற்சாலைகள்‌, பள்ளி, கல்லூரி என பல முக்கிய பகுதிகளுக்கு செல்லும் வழியாகும். இதை விட்டால் பல தூரம் சுற்றி வரும் நிலையாக இருக்கிறது.

தஞ்சாவூர் லோ பிரிட்ஜ்


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “ மழை காலங்களில் இந்த தண்டவாளத்தை பயண்படுத்துவது மிகவும் சிரமமாகவும் பதற்றமாகவும் உள்ளது , எத்தனையோ அரசு அதிகாரிகள் எம் எல் ஏ- கள் இதை பார்த்தும் ஒரு நிரந்தர முடிவை எடுக்காமல் இருப்பது மிகவும் வருத்தம் அடைய வைக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஏற்கனவே இந்த தண்டவாளத்தில் இரண்டு பேர் சென்று விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கதாகும்
Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி