Home /thanjavur /

குழந்தைகள் பூங்கா திறந்தவெளி மதுக்கூடமாக மாறிய அவலம்... உள்ளே நுழைய அச்சப்படும் பொதுமக்கள்.. கவனிக்குமா தஞ்சை மாநகராட்சி?

குழந்தைகள் பூங்கா திறந்தவெளி மதுக்கூடமாக மாறிய அவலம்... உள்ளே நுழைய அச்சப்படும் பொதுமக்கள்.. கவனிக்குமா தஞ்சை மாநகராட்சி?

குழந்தைகள்

குழந்தைகள் பூங்கா, தஞ்சை கீழவாசல்

Thanjavur Latest News : தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வரும் இப்பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தஞ்சை கீழவாசல் பகுதியில் ராயல் சிட்டி நகர் உள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொழுதுபோக்குவதற்காக, ஊஞ்சல், சீசா கற்கள், சிமெண்ட் இருக்கைகள், மின் விளக்கு வசதி, சறுக்கு மரங்கள் ஆகிய வசதிகளுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாநகராட்சி சார்பில் சிறுவர் பூங்கா ஒன்று சுற்றுச் சுவருடன் அமைக்கப்பட்டது.

இப்பூங்காவிற்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்வது வழக்கம்.மேலும் பெரியவர்கள் நடை பயிற்சி மேற்கொள்வதுடன், குழந்தைகள் விளையாடுவதையும் ரசித்தவாறே பொழுதை கழிப்பார்கள்.  இந்த பூங்கா தற்போது முறையான‌ பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.

குழந்தைகள் பூங்கா, தஞ்சை கீழவாசல்


திறந்த வெளி பாராக....

இந்த பூங்காவில் சிமெண்ட் இருக்கைகள்,விளையாட்டு உபகரணங்கள், விலங்குகள் உருவம் கொண்ட பொம்மைகள் ஆகியவை சேதமடைந்து காணப்படுகிறது.  மேலும் பூங்காவில் ஆங்காங்கே புற்களும் செடிகளும் வளர்ந்து புதர் போல் காணப்படுகிறது...‌ இதனால் இந்த பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது மேலும் தியானத்திற்கென அமைக்கப்பட்ட கட்டிடத்தில் சிலர் திறந்த வெளி பாராக பயன்படுத்துகின்றனர்.

குழந்தைகள் பூங்கா, தஞ்சை கீழவாசல்


குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து ஆங்காங்கே போட்டு செல்வதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இப்பூங்காவிற்கு வர அச்சப்படுகிறார்கள். மேலும் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் பாதையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது.

குழந்தைகள் பூங்கா, தஞ்சை கீழவாசல்


இந்த பூங்காவை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் புதுப்பொலிவுடன் சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி