முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை பெரிய கோவிலில் 5 நாள்கள் நடைபெற்ற கலைநிகழ்ச்சி- மெய்மறந்து ரசித்த பொதுமக்கள்

தஞ்சை பெரிய கோவிலில் 5 நாள்கள் நடைபெற்ற கலைநிகழ்ச்சி- மெய்மறந்து ரசித்த பொதுமக்கள்

X
பரதநாட்டியம்

பரதநாட்டியம்

Thanjavur | தஞ்சை பெரிய கோவிலில் ஐந்து நாட்கள் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் தென்னக பன்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.

தென்ன பன்பாட்டு மையம்:

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் உள்ள கலைகளை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசால், தஞ்சாவூரில், தென்னக பண்பாட்டு மையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த அமைப்பு சார்பில், இந்தாண்டு சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சையைச் சுற்றியுள்ள சிவாலயங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலில், கடந்த 18ம் தேதி தொடங்கிய பரதநாட்டியம், மோகினி ஆட்டம், கதகளி, குச்சிப்புடி உள்ளிட்ட தென்மாநில பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நேற்றுடன் நடந்து முடிந்தது.

மக்கள் கூட்டத்தில் பெரிய கோவில்

மயிலாடுதுறை மயூரநாதர், திருவிடைமருதுார் மகாலிங்கேஸ்வரர் உள்ளிட்ட கலைஞர்களை ஏற்பாடு செய்து, கோவில் நிர்வாகத்துடன் இணைந்து, கலை நிகழ்ச்சிகள் நடத்த, அந்த அமைப்பு திட்டமிட்டு கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்தி பொதுமக்களுக்கு விருந்து படைத்துள்ளது.

இறுதி நாள் நிகழ்ச்சியான நேற்று பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் நடைபெற்று பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்நிகழ்ச்சிகளை நூற்றுக்கணக்கான பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

First published:

Tags: Local News, Thanjavur