முகப்பு /தஞ்சாவூர் /

கீழே விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.. அச்சத்தில் தஞ்சை மக்கள்!

கீழே விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.. அச்சத்தில் தஞ்சை மக்கள்!

X
மேல்நிலை

மேல்நிலை நீர்தேக்க தொட்டி 

Thanjavur water tank damage | தஞ்சை புதுப்பட்டினம்  ஊராட்சியில் பழுதடைந்த நீர்தேக்க தொட்டியால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து வருகின்றனர். 

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை புதுப்பட்டினம் ஊராட்சி பகுதி உள்ள ராதாகிருஷ்ணன் நகர் 4-வது தெரு அருகே மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி ஒன்று உள்ளது. 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டி அமைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

இதன் மூலம் ராதா கிருஷ்ணன் நகர், மருதுபாண்டியர் நகர், ஜோதி நகர், நடேசன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது.

இடிந்து விழும் நிலை:-

இதனால் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை தாங்கி பிடித்துள்ள தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. ஒரு சில பகுதிகளில் பெரிய விரிசல்களும் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி வலுவிழந்து காணப்படுகிறது. மேலும், தொட்டியில் இருந்து நீர் கசிந்து வெளியேறி வருகிறது. இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கீழே விழுந்து விடும் சூழல் நிலவுகிறது.

இதையும் படிங்க | கர்நாடகாவில் பா.ஜ.கவுக்காக வேட்புமனுவைத் திரும்பப் பெற்ற அ.தி.மு.க வேட்பாளர்

புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து தர கடந்த 6 மாதங்களுக்கு முன்பேஊராட்சி மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், இது வரையில் அதற்கான பணிகள் நடைபெறமால் உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.. எனவே காலதாமதம் ஏற்படுத்தாமல் புதிய நீர்தேக்க தொட்டியை அமைத்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Thanjavur