ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பாக நடைபெற்ற தை மாத பிரதோஷம்- திரளான மக்கள் பங்கேற்பு

தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பாக நடைபெற்ற தை மாத பிரதோஷம்- திரளான மக்கள் பங்கேற்பு

X
தஞ்சை

தஞ்சை பெரிய கோவில்

Thanjavur | தஞ்சை பெரிய கோயிலில் நேற்று தை மாத பிரதோஷம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாதம் தோறும் பல்வேறு வகையான சிறப்பு ஆராதனைகள், விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு மாட்டு பொங்கலன்று 108 பசுக்களுடன் 700கிலோ காய்கறிகளுடன் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்ற நிலையில் நேற்று தை மாத முதல் பிரதோஷம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தை மாத பிரதோஷம்:

தை மாதத்தில் வரும் பிரதோஷம் வேண்டியதை நிறைவேற்றும் முக்கியமான பிரதோஷம் ஆகும். நேற்று சிவன் கோயில்களில் வெகு விமர்சையாக பிரதோஷங்கள் நடைபெற்றது. புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலிலும் நேற்று தை மாத பிரதோஷமானது நடைபெற்றது.

மாதம் இருமுறை நடக்கும் இந்த பிரதோஷம் ஆனது தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவியப்பொடி, கரும்புச்சாறு, அரிசிமாவு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

சீறிப்பாய்ந்த காளைகள்.. தஞ்சை திருக்கானூர்பட்டியில் அனல் பறக்க நடந்த ஜல்லிக்கட்டு போட்டி..

சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்கமகா நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.இதில் திரளான பக்தர்கள் பிரதோஷத்தில் கலந்து கொண்டு பெரிய நாயகி அம்மனையும் வழிப்பட்டனர்.

செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.

First published:

Tags: Local News, Thanjavur