ஹோம் /தஞ்சாவூர் /

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள்.. தஞ்சை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள்.. தஞ்சை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

Thanjavur News | தஞ்சாவூர் மாநகராட்சியின் பிரதானமான சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள், உள்ளிட்ட கால்நடைகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சாவூர் மாநகராட்சி முழுவதும் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்பட்டுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தஞ்சை மாநகராட்சியில் முக்கிய பகுதிகளாக திகழும் நாஞ்சிக்கோட்டை சாலை, கான்வென்ட், ராமநாதன், புதிய பேருந்து நிலையம் சாலை, கரந்தை என கிட்டத்தட்ட தஞ்சை மாநகராட்சியின் பிரதான பகுதிகள் முழுவதும் மாடுகள், ஆடுகள் போன்ற கால்நடைகள் சுற்றி திரிகின்றன.

ஏற்கனவே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் தினமும் அதிக அளவிளான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன‌. இந்நிலையில் தற்போது கடந்த ஆண்டுகளை விட தற்போது ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றி திரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதோடு மட்டுமன்றி தினமும் விபத்துக்களிலும் சிக்கித் தவிக்கின்றனர்.

முக்கியமாக காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்லும் போதும், குழந்தைகளை பள்ளிகளில் விடுவதற்கு வாகனங்களில் செல்லும் பெற்றோர்கள், வேலைக்கு செல்பவர்கள், அவசர ஊர்தி என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இருந்தும் வாயில்லா ஜீவன் என வாகனங்களை நிறுத்திவிட்டு மாடுகள் கடந்து செல்லும் வரை மக்கள் காத்திருந்து செல்கின்றனர். இருப்பினும் மாடுகள் உரிமையாளர்களின் மீது ஆதங்கத்தை கொட்டிவிட்டு செல்கின்றனர்.

எப்போதாவது என்றால் பரவாயில்லை, பெரிய பாதிப்பு யாருக்கும் இல்லை. ஆனால் இது தினந்தோறும் நடந்து வருவது சிக்கலை ஏற்படுத்துகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘தினமும் கால்நடைகளால் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். நாங்கள் முடிந்த வரை பொறுத்து கொண்டு தான் செல்கிறோம். மாடுகளை வளர்ப்பவர்கள் மீது தான் தவறு இருக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. தயவு செய்து இதற்கு மாநகராட்சி ஒரு நிரந்தர தீர்வு ‌அளிக்க வேண்டும், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு கடுமையாக அபராதம் விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur