ஹோம் /தஞ்சாவூர் /

மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு தேர்வான தஞ்சை மாணவர்கள்

மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு தேர்வான தஞ்சை மாணவர்கள்

மாநில

மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு தேர்வான தஞ்சை மாணவர்கள்

Tanjore District News : மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் தேர்வாகி உள்ள வின்னர் அகாடமி மாணவர்கள். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை வின்னர் மல்டிமியூரல் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு தயாராகி உள்ளனர்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை முனிசிபல் காலனியில் உள்ள வின்னர் அகாடமி மற்றும் ரெங்கநாயகி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனம் பாரம்பரிய கலைகளான யோகா, சிலம்பம், கராத்தே உள்ளிட்ட கலைகளையும், கீபோர்டு, கிட்டார், மற்றும் இந்தி உள்ளிட்ட வகுப்புகளை பயிற்சி அளிக்கிறது.

பயிற்சி பெறுபவர்கள் அவர்கள் பயிற்சி முடிந்தவுடன் தங்களது உயர்கல்விகளுக்கு பெற்றோரை எதிர் பாராமல், மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது.

இதில் ஏராளமான மாணவர்கள் மாவட்ட மாநில சர்வதேச போட்டிகளில் கூட பங்கேற்று பதக்கங்களை பெற்று வரும் நிலையில் தற்போது மாநில அளவிலான போட்டிகளில் கிரித்திக், ரோகித், நித்தியசிரி ஆகிய மூன்று மாணவர்களும் தேர்வாகி உள்ளனர்‌.

இதையும் படிங்க : மழை பெய்யுதே.. ரெயின் கோட் போட்டு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்... தஞ்சாவூரில் சுவாரஸ்ய சம்பவம்!

இதில் மாணவர்களுக்கு கடுமையான பயிற்சிகளை ஆசான் ராஜேஷ் கண்ணா வழங்கி வரும் நிலையில் தன்னம்பிக்கையோடு பயிற்சிகளை மேற்கொண்டு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும் என்று சாதனை வெறியோடு உருவாகி வருகின்றனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், “இந்த வாய்ப்பு கிடைத்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க வெற்றி பெறுவோம். ஆசான் கூறிய நுணுக்கங்களை மனதில் வைத்து திறமையால் இந்த போட்டிகளில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு பெறுமையை வாங்கி தருவோம்” என தன்னம்பிக்கையுடன் கூறினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore