தஞ்சையை சேர்ந்தவர் பாலமுருகன் (56), இவர் திருவையாறு அரசு இசை கல்லூரியில் 1991ம் ஆண்டில் மிருதங்கத்தில் டிப்ளமோ பெற்றுள்ளார், மிருதங்கத்தில் டிப்ளமோ பெற்ற இவர் மேடை நிகழ்ச்சிகள் மற்றும் இசைக் கச்சேரிகளை ரசித்து பார்த்த போது தானும் அது போல் செய்ய வேண்டும் என்று எண்ணி தனது குரல் வளத்தால் இசைக் கருவிகள் போல் வாசித்து பயிற்சி பெற்றுள்ளார்.
பின்னர் பிரபல தவில் வித்வான் அரித்துவாரமங்கலம் ஏகே பழனிவேல், இவரது திறமையை பார்த்து குரல் இசை வாத்திய நிகழ்ச்சியில் பாட அப்போது அறிமுகப்படுத்தி உள்ளார், பின்னர் அதனைத் தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளாக தனது குரல் இசையால் லயவாத்திய இசையை தனித்திறமையால் 'மேடை நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் விழாக்களில் பாடி அசத்தி வருகிறார், இவரது திறமையை பாராட்டும் வகையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் மத்திய, மாநில அரசின் விழாக்களில் பாராட்டு சான்றிதழும் விருதுகளும் பெற்றுள்ளார்.
பாலமுருகனின் அசாத்திய திறமை
குரல் இசையால் லய வாத்தியங்களான தவில், மிருதங்கம், கஞ்சிரா, முகர்சிங், வயலின், சாக்ஸபோன், கொன்னக்கோல், வீணை போன்ற இசைக்கருவிகளின் இசையைப் போன்று இசைக்கருவிகள் இல்லாமல் தனது குரல் மூலம் வாசித்து அசத்தி வருகிறார், மேலும் பக்தி பாடல்கள் திரையிசைப் பாடல்களையும் பாடும் திறமையையும் பெற்றுள்ளார், இது மட்டுமல்லாமல் மிருதங்கம், கடம், கொன்னகோல் ஆகிய இசைக்கருவிகளையும் வாசிக்கும் திறமையும் பெற்றுள்ளார்.
இசைக்கருவிகள் இல்லாமல் தனது குரல் இசை மூலம் பாடிவரும் பாலமுருகனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர், தனது குரல் வளத்தால் இசையை வாசிக்கும் பாலமுருகனுக்கு மத்திய மாநில அரசுகள் உயரிய விருது வழங்கி சிறப்பிக்க வேண்டுமென இசைக் கலைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur