ஹோம் /தஞ்சாவூர் /

Thanjavur News : பள்ளி மாணவிகள் இருட்டில் திக் திக் நடைபயணம்.. பேருந்து வசதியில்லாததால் தஞ்சையில் அவலம்..

Thanjavur News : பள்ளி மாணவிகள் இருட்டில் திக் திக் நடைபயணம்.. பேருந்து வசதியில்லாததால் தஞ்சையில் அவலம்..

X
தஞ்சை

தஞ்சை

Thanjavur News : தஞ்சாவூர் விளார் அருகே பேருந்து வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரவில் மூன்று கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவலம் நிலவுகிறது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் விளார் அருகே உச்சிமாஞ்சோலை, கண்டித்தன், பட்டு சொக்களை, பிள்ளை கான் சாவடி, என  அடுத்தடுத்து 5 கிராமங்கள் இருக்கிறது. இந்த கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட 100 மாணவ, மாணவிகள் தஞ்சையில் படித்து வருகின்றனர்.

இந்த மாணவர்களுக்கு மட்டுமின்றி இந்த ஊர்களைச் சேர்ந்த பொது மக்களுக்கும் போதிய அளவில் பேருந்து வசதி இல்லை. அதிகபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே பேருந்து வருகிறது. அதிலும் காலை வரும் ஒரு பேருந்தும் விவசாயிகள், காய்கறி மூட்டைகள், பொதுமக்கள் என  நிரம்பி வழிகிறது. இந்த கூட்ட நெரிசலில் தான் பள்ளி, கல்லூரி மாணவர்களும் செல்ல வேண்டி உள்ளது. இதை விட்டால் வேறு பேருந்தும் இல்லை. எனவே காலை நேரத்தில் அதிகப்படியான கூட்டத்துடன் இந்த பேருந்து செல்கிறது. இரண்டாவதாக மாலை வரும் ஒரு பேருந்து, நேரத்திற்கு வராததால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயனற்றதாகவே இருக்கிறது.

இருட்டில் 3கிமீ நடந்து செல்லும் மாணவர்கள்

அதை விட்டால் 7 மணிக்கு ஒரு பேருந்து வருகிறது அந்த பேருந்தில் தான் பள்ளி கல்லூரி மாணவர்கள் தினமும் பயணம் செய்கின்றனர். இந்த பேருந்து விளார் பகுதியிலேயே நின்று செல்கிறது.. விளாரிலிருந்து இந்த கிராமங்களுக்கு செல்ல கிட்டத்தட்ட 3, 4, 5 கி.மீ ஒவ்வொரு கிராமத்திற்கும் இருக்கிறது. இந்நிலையில் மாணவர்கள் வகுப்புகளை முடித்துவிட்டு தினமும் இரவில் அச்சத்துடனே வீடு திரும்புகின்றனர். இந்த மூன்று, நான்கு கிலோமீட்டர்கள் தினமும் இரவில் நடந்தே செல்கின்றனர். இதில் சமூகவிரோதிகளின் அச்சுறுத்தல் மட்டுமின்றி பாம்பு, பூச்சிகளாலும் பயந்து நடுங்கி தினமும் வீடு திரும்புகின்றனர் மாணவர்கள்.

இருட்டில் செல்போன் வெளிச்சத்தில் நடந்து செல்லும் மாணவிகள்

மாணவர்களின் பெற்றோர்கள் தினம்தோறும் குழந்தைகளுக்காக அச்சத்துடனே காத்துக்கொண்டிருக்கின்றனர். அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட பேருந்து வசதி இல்லை. காலை விட்டால் மாலை அதுவும் நான்கு கிலோ மீட்டர் நடந்து சென்று ஏற வேண்டி உள்ளது. விளார் வழியாக செல்லும் பேருந்து இந்த ஊர்களுக்குள் சென்று செல்ல சாலையும் உள்ளது. ஆனால் அதை செய்ய மறுக்கிறார்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் அணுக்களும் அளிக்கப்பட்டுள்ளது இதில் என்ன கெட்டுவிட போகிறது என்று தெரியவில்லை. எங்களுக்கு இந்த நிலைதான் என்று கண்ணீர் மல்க மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராமத்தினர் கூறினார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று இந்த ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் அரசு நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Tanjore, Thanjavur