முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை| சிறப்பாக நடைபெற்ற உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு

தஞ்சை| சிறப்பாக நடைபெற்ற உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு

X
குடமுழுக்கு

குடமுழுக்கு

Thanjavur | தஞ்சாவூரிலுள்ள உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு முழு சிறப்பாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் நாடார்கள் உறவின் முறை தர்ம பரிபாலன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கீழவாசல் ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

குடமுழுக்கு

தஞ்சை கீழவாசல் ஓட்டக்காரத் தெருவில் உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோவில் உள்ளது. தஞ்சை நாடார்கள் உறவின்முறை தர்மபரிபாலன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலின் மூலவர் சன்னதியின் இரு புறமும் உற்சவர் அம்மன். ஏனாதிநாயளார், வராகிஅம்மன், சிவதுர்க்கை அம்மன், சரஸ்வதி, லட்சுமி, கல்யாண கணபதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், அய்யப்பன், நாகம்மாள். ஆஞ்சநேயர். குபேரன்,காலபைரவர், செல்வகணபதி ஆகிய 14 சன்னதிகள் உள்ளன.

குடமுழுக்கு

இந்த கோவிலில் குடமுழுக்கு முடிவு செய்யப் பட்டு, அதற்கான திருப்பணிகள் நிறைவடைந்துள்ளது. கோவில் குடமுழுக்கு 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து குடழுக்கு விழாவையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிந்தே தினமும் யாகசலை பூஜைகள் நடைபெற்று வந்தது.

தினமும் விக்னேஸ்வர பூஜை. கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரகஹோமம் நடைபெற்றது. மாலையில் வாஸ்துசாந்தி பிரவேசபலி நடந்தது.

இரண்டாம் நாளில் புனிதநீர் ஊர்வலத்தில் 2000 பெண்கள் கலந்து கொண்டு சிவகங்கை குளத்தில் இருந்து கோயிலுக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து தினமும் அன்னதானம் நடைபெற்று வந்த நிலையில் இன்று (வெள்ளி கிழமை) காலையில் 6 -ம் கால பூஜைகள் நடைபெற்று.. 10 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் திருவையாறு சுரேஷ் சிவாச்சாரியார் தலைமை தாங்கி 25 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். மேலும் இந்த கும்பாபிஷே விழாவில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தார்.

First published:

Tags: Local News, Thanjavur