Home /thanjavur /

திருமலைசமுத்திரம்னு சொன்னாலே பேருந்துல இருந்து நாய் மாதிரி தொரத்துராங்க.. 25 வருஷமா இங்க என்ன தான் பிரச்னை?

திருமலைசமுத்திரம்னு சொன்னாலே பேருந்துல இருந்து நாய் மாதிரி தொரத்துராங்க.. 25 வருஷமா இங்க என்ன தான் பிரச்னை?

தஞ்சாவூர்

தஞ்சாவூர் - திருமலைசமுத்திரம்

Thanjavur Thirumalai Samudram : தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலோ அல்லது திருச்சியிலோ பஸ் ஏறினால் திருமலைசமுத்திரத்தில் பஸ்கள் நிற்காது. செங்கிப்பட்டி அல்லது சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தான் நிற்கும். அதில் இறங்குவதாக இருந்தால் மட்டும் ஏறுங்கள் என்று கண்டக்டர்கள் கறாராக கூறுகிறார்கள். இதனால் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur
தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் அருகே உள்ளது திருமலைசமுத்திரம். தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து, 15 கி.மீ. தொலைவில் உள்ளது இவ்வூராட்சி. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி என இரண்டு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

தஞ்சை-திருச்சி  நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊரில் இரண்டு வழித்தடங்களிலும் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் திருமலைசமுத்திரம் மட்டும் அல்லாது அருகில் உள்ள கிராமங்களான மருதகுடி, அய்யாசாமிபட்டி, குரும்பூண்டி, மாதுராம்புதுக்கோட்டை ஆகிய 5 கிராமங்கள் மக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளது.

இந்த 5 கிராமங்களிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தஞ்சை - திருச்சி வழித்தடத்தில் செல்லும் அணைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என்று போக்குவரத்து கழகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது, ஆனால் இதனை பேருந்து ஓட்டுனர்கள் கடைபிடிப்பதே இல்லை. அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நின்று செல்வதில்லை.

திருமலைசமுத்திரம் பேருந்து நிறுத்தம்


தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலோ அல்லது திருச்சியிலோ பஸ் ஏறினால் திருமலைசமுத்திரத்தில் பஸ்கள் நிற்காது. செங்கிப்பட்டி அல்லது சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தான் நிற்கும். அதில் இறங்குவதாக இருந்தால் மட்டும் ஏறுங்கள் என்று கண்டக்டர்கள் கறாராக கூறுகிறார்கள். இதனால் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.

இதனால் பேருந்துக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் செல்பவர்கள் 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் பேருந்துக்காக காத்துக்கிடக்கும் மாணவ, மாணவிகள், கூலி தொழிலாளர்கள் ஏதேனும் ஒரு பேருந்தாவது நிற்குமா என மணிக்கணக்கில் காத்திருந்து,  திரும்பவும் வீட்டிற்கே திரும்பச் செல்லும் அவல நிலை ஏற்படுகிறது.

திருமலைசமுத்திரம்


திருமலை சமுத்திரத்திற்கு செல்லும் பயணிகள் ஏற, இறங்க சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலும் - செங்கிபட்டி‌யிலும் பேருந்தை நிறுத்துகின்றனர். திருமலை சமுத்திரத்திற்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு 2 கி.மீ தூரம் உள்ளது. செங்கிபட்டியில்‌ இருந்து திருமலை சமுத்திரத்திற்கு‌ 7 கி.மீ தூரம் உள்ளது இதனால் கிராம மக்கள் மற்றும் திருமலை சமுத்திரம் பள்ளிகளில் பணிபுரியும் அரசு ஆசிரியர்கள் பல கிமீ தூரம் நடந்தே செல்கின்றனர்.

20 ஆண்டு கால‌ பிரச்னை:

இந்த பிரச்சனை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது, ஒவ்வொரு முறை முறையிடும்போதும், போக்குவரத்து கழகம் வலியுறுத்தலினை ஏற்று ஒரு வாரம் நிறுத்துவார்கள் பிறகு கண்டுகொள்வது கிடையாது.. இதே‌ நிலமைதான்.

திருமலைசமுத்திரம் மக்களின் 25 ஆண்டுகால துயரம்..


இது குறித்து திருமலை சமுத்திரத்திறம் ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது:, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.. தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாக கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளாத அதிகாரிகள் தற்போது தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா..என‌ எதிர்பார்ப்பில் உள்ளனர்.. அப்பகுதி கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள்
Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி