முகப்பு /தஞ்சாவூர் /

கஜா புயலால் சேதமான தெக்கூர் அங்கன்வாடி மையம்.. சீரமைக்காததால் குழந்தைகளை கல்வி பயில அனுப்ப தயங்கும் பெற்றோர்கள்..

கஜா புயலால் சேதமான தெக்கூர் அங்கன்வாடி மையம்.. சீரமைக்காததால் குழந்தைகளை கல்வி பயில அனுப்ப தயங்கும் பெற்றோர்கள்..

X
தஞ்சாவூர்

தஞ்சாவூர் - தெக்கூர் அங்கன்வாடி

Thanjavur District News : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அன் கிராமத்தில் குழந்தைகள் நல மையம் (அங்கன்வாடி) அமைந்துள்ளது. கஜா புயலால் சேதமான இந்த அங்கன்வாடி மையம் இன்னமும் சீரமைக்கப்படாமலேயே உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

கஜா புயலின் போது சேதமடைந்த குழந்தைகள் நல மைய கட்டிடம் இதுவரையில் சீரமைக்கப்படாததால் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப தயங்கும் பெற்றோர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அன் கிராமத்தில் குழந்தைகள் நல மையம் (அங்கன்வாடி) அமைந்துள்ளது. தெக்கூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.  தற்போது இந்த அங்கன்வாடி கட்டிடத்தின் சுவர்கள் சேதமடைந்தும், சமையல் அறை தரைகள் பள்ளம் ஏற்பட்டும், கரும்பலகைகள் நிறம் மங்கியும், இருக்கிறது.

மேலும் மின்சார வசதி, கழிப்பறை வசதி போன்ற ஒரு குழந்தைகள் நல மையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருக்கிறது.

கடந்த ‌4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலினால் உடைந்த கட்டிடத்தின் மேற்கூரை இது வரையிலும் சரி‌ செய்யப்படாமல் இருக்கிறது, தற்போது மழை காலம் தொடங்கியதால், தினமும் பெய்யும் மழை நீரும் கட்டிடத்தின் முழுவதும் நிரம்பிவிடுகிறது, இது போன்ற சூழலில் மிகவும் சிரமப்பட்டு குழந்தைகள் கல்வி பயின்று வருவதால் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்குகிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இதுகுறித்து தெக்கூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், "இக்கட்டிடத்தை இடித்து புது கட்டிடம் அமைத்து தர 2 ஆண்டுகளாக மனு அனுப்பியதாகவும், ஆனால் இதுவரை கண்டுகொள்ளாமல்தாமதப்படுத்துவதாகவும், ஆனால் விரைவில் சீரமைக்க ஏற்பாடுகள் செய்வேன்” என்றும் கூறினார்.

First published:

Tags: Local News, Thanjavur