தஞ்சையை சேர்ந்த எஸ் நடராஜன் சுப்பையா(உணவகத்தின் நிறுவனர்) இவரின் தந்தை வி.சுப்பையா தஞ்சையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ரயிலடி நிலையம் அருகில் பால் வியாபாரம்செய்து வந்துள்ளார். பிறகு கடின முயற்சியால் சுப்பையா சைவ உணவகத்தை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். முதன் முதலில் தஞ்சை ரயிலடி நிலைத்தில் ரோட்டு கடை போட்டு வந்த இவர் சில ஆண்டுகளுக்கு பிறகுரயில் நிலையம் அருகேஉணவகத்தை தொடங்கியுள்ளார்.
உணவகத்தின் சிறப்பு:
இந்த உணவகத்தின்சிறப்பு என்னவென்றால் 40 ஆண்டுகளாக 7 வகையான சட்டினிகளை சுவை மாறாமால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதில் முக்கியமாக சிதம்பரம் பகுதியில் மிகவும் பிரபலமான கத்தரிக்காய் கொச்சி - சட்டினியை தஞ்சையில் முதன் முதலில் இவர் அப்பாவே ( சுப்பையா) அறிமுகப்படுத்தியுள்ளார் என பலரும்கூறுகின்றனர்.
சுப்பையா சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்ற போது அங்கு உள்ள ஒரு உணவகத்தில் கத்தரிக்காய் கொச்சி சாப்பிட்டுள்ளார். அதன் சுவையில் விழுந்த இவர் நாமும் நம் கடையில் இதே வகை டிஷ்-யை அறிமுகம் செய்ய வேண்டும் என்று எண்ணி அதன் செய்முறையை அறிந்து அதே சுவையில் தஞ்சையிலும் அறிமுகம் செய்துள்ளார்.
கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சையில் இந்த ஒரு உணவகத்தில் மட்டுமே இந்த கத்தரிக்காய் கொச்சி (சட்னி) இவ்வுணவகத்தில்இருந்துள்ளது..தற்போதே ஓரிரு கடைகளில் இருப்பதாக கூறப்படுகிறது.
மற்றொரு சிறப்பு தஞ்சையில் காஃபி பேலஸ் எவ்வளவு பேமஸோ அதே போல இந்த சுப்பையா டிஃப்பன்-னும் பிரபலமாக உள்ளது. எனவே தான் தஞ்சையில் ரயிலடி, செல்வம் நகர், புதிய பேருந்து நிலையம்,ஈஸ்வரி நகர், ரயிலடி லோ பிரிட்ஜ் ஆகிய 5 இடங்களில் இக்கடை அமைந்து வாடிக்கையாளர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் பல ஆண்டுகளாக தொடர்ந்து உணவை ருசித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய வாடிக்கையாளர்கள், ‘நாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வுணவகத்தில் சாப்பிடுகிறோம்.சைவ பிரியர்களுக்கு ஏற்ற உணவகம் என்றால் அது இது தான். நாங்க சாப்பிட தொட்ங்கிய நாளிலிருந்தே 7 வகையான சட்டினிகள் தான் உள்ளன.அனைத்தும் சுவையாகவும் தரமாகவும் இருக்கும்.
Lovers Cafe | காதலர்களுக்கு மரியாதை தரும் கஃபே.. தஞ்சாவூரில் இப்படி ஒரு இடமா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur