Home /thanjavur /

Thanjavur News : பந்தய சாலையாக மாறிய உள்ளூர் சாலைகள்.. பதற்றத்தில் சீனிவாசபுரம் மக்கள்.. வேகத்துக்கு வருமா தடை?

Thanjavur News : பந்தய சாலையாக மாறிய உள்ளூர் சாலைகள்.. பதற்றத்தில் சீனிவாசபுரம் மக்கள்.. வேகத்துக்கு வருமா தடை?

தஞ்சாவூர்

தஞ்சாவூர் - சீனிவாசபுரம்

Thanjavur News : சீனிவாசபுரம் பகுதி முழுவதும் வேகத்தடை இல்லாததால் தினமும் ஏற்படும் பயங்கர விபத்துக்கள்!! 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தஞ்சை சீனிவாசபுரம் பகுதி முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலையில் இதுவரை வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் கட்டுப்பாடு இழக்கும் வாகன ஓட்டிகளால் தினமும் அதிக‌ அளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது.

தஞ்சாவூர் சீனிவாசபுரத்தில் உள்ள தெருக்களுக்கு செல்ல ராஜன் சாலை, ராஜாஜி சாலை, கிரி சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட 6 பிரதான சாலைகள் உள்ளன. இந்த ஆறு சாலைகளும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முழுவதுமாக சீரமைக்கப்பட்ட நிலையில், இது வரை எந்த சாலையிலும் வேகத்தடை அமைக்கப்படாததால் தற்போது அதிக அளவில் விபத்து ஏற்படும் பகுதியாக மாறியுள்ளது.

தஞ்சாவூர் - சீனிவாசபுரம்


மேலும் காமராஜர் சாலையில் அரசு உதவிபெறும் மழலையர் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி பகுதியிலும் கூட வேகத்தடையும் மற்றும் பள்ளி பகுதி என்ற பதாகையும் வைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கட்டுப்பாடின்றி வேகமாக செல்கின்றனர். மேலும் சிறு குழந்தைகள்  விபத்தில் சிக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.

தஞ்சாவூர் - சீனிவாசபுரம்


இந்த சீனிவாசபுரம் பகுதி முழுவதும் நான்கு வழி சாலைகள் அதிக அளவில் இருக்கிறது. இதில் எந்த ஒரு இடத்திலும் வேகத்தடை அமைக்கப்படாததால் விரைந்து வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

தஞ்சாவூர் - சீனிவாசபுரம்


இது குறித்து இப்பகுதி‌ மக்கள் கூறியதாவது, “சீனிவாசபுரம் பகுதியில் அரசு அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் அதிக அளவில் வசிக்கின்றனர். இருந்தும் இப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை வேகத்தடை அமைக்கப்பட்டவில்லை. குழந்தைகள், வயதானவர்கள் சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விரைவில் வேகத்தடை அமைத்துத் தருவதாக இப்பகுதி கவுன்சிலர்  கூறுகிறார். அதற்குள் பெரிதளவில் விபத்துக்கள் ஏற்பட்டால் என்ன செய்வார்கள் என்றும் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
எனவே மிக விரைவாக விபத்துக்கள் ஏற்படுவதற்குள் வேகத்தடைகளும் பதாகைகளும் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர் பகுதிவாசிகள்.
Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி