முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சையில் விறுவிறுப்பாக நடந்து வரும் ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள்..

தஞ்சையில் விறுவிறுப்பாக நடந்து வரும் ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள்..

X
விறுவிறுப்பாக

விறுவிறுப்பாக நடைபெறும் போட்டிகள்

Thanjavur News : தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா ஜனவரி 30ம் தேதி நடந்தது. இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்படி கபடி, சிலம்பம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால், மேசைபந்து, கிரிக்கெட் ஆகிய போட்டிகளின் முதல் சுற்றுகள் நடத்தப்பட்டன. 2ம் நாளான பிப்ரவரி 1ம் தேதி கபாடி, இறகு பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகளின் 2ம் சுற்று, இறுதி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.3000 வரை பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வெற்றி பெற்ற அணிகளை தேர்வு செய்து இறுதிச்சுற்று நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் அணிகளை ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற இருக்கும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகள் ஒவ்வொரு பரிவில் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்ற பிரிவுகளில் போட்டிகளில் நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் இந்த மாதம் (பிப்ரவரி) 30ம் தேதி வரை நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Thanjavur