ஹோம் /தஞ்சாவூர் /

400 ரூபாயில் ஸ்மார்ட் ஸ்விட்ச் சிஸ்டம்.. தஞ்சையில் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்..

400 ரூபாயில் ஸ்மார்ட் ஸ்விட்ச் சிஸ்டம்.. தஞ்சையில் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்..

X
மாணவர்களின்

மாணவர்களின் கண்டுபிடிப்பு

Tanjore District News : அரசுப் பள்ளி மாணவர்கள் குறைந்த செலவில் ஸ்மார்ட் சுவிட்ச் சிஸ்டத்தை உருவாக்கியுள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு கலை அறிவியல் என 21 வகையான நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் பலர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணத்தினால் தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் இந்த நிகழ்வுகள் நடக்காமல் இருந்ததை அடுத்து இந்த ஆண்டு நடந்த இந்த நிகழ்வுகளில் அதிகப்படியான மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர்.

மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிகொணர்ந்து, பரிசுகளையும் பெற்றனர்.

இதையும் படிங்க : தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

இதில் முதல் பரிசாக 3,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 2,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 1,000 ரூபாய் என மாணவர்களுக்கு வழங்கபட்டது. அதிக புள்ளிகள் எடுத்த பள்ளிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கானநலத்திட்ட உதவிகளையும் பிரிஸ்ட் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இதில் அறிவியல் கண்காட்சி நிகழ்வுகளில் கலந்து கொண்ட திருச்சி மணப்பாறையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் வீடுகளில் மின் வசதிகளை மொபைல் மூலம் கன்ரோல் செய்யும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதற்கு மாணவர்களே சொந்தமாகவே மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே இணையதளத்தில் கிடைக்கும் நிலையில் குறைந்த செலவில் நாங்கள் செய்துள்ளதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதாவது இணையதளத்தில் இதுபோன்ற ஸ்மார்ட் ஹோம் சிஸ்டம்ஸ் 2,000 ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதால் பெரியளவில் யாரும் வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதை உருவாக்க வெறும் 400-ரூபாய் மட்டுமே செலவு ஆனது என்றும் கூறினர்.

First published:

Tags: Local News, Tanjore