ஹோம் /தஞ்சாவூர் /

பேருந்து நிறுத்தம் இருக்கு.. பயணியர் நிழற்குடை எங்கே? - அவதிப்படும் தஞ்சை பள்ளி மாணவர்கள்

பேருந்து நிறுத்தம் இருக்கு.. பயணியர் நிழற்குடை எங்கே? - அவதிப்படும் தஞ்சை பள்ளி மாணவர்கள்

X
தஞ்சை

தஞ்சை

Tanjore District News : தஞ்சையில் பயணியர் நிழற்குடை இல்லாமல் பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மேரிஸ் கார்னரில் பயணியர் நிழற்குடை இல்லாமல் இருப்பதால் வெயில் மழைகளில் பேருந்துக்காக காத்திருக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

தஞ்சை மேரீஸ் கார்னர் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் இறக்கத்தில் பயணிகள் நிழற் குடை இல்லாததால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வெயில் மற்றும் மழையில் நனைந்து கொண்டு பேருந்துக்காக காத்திருக்கின்றனர்.

இந்த பகுதியில்தான் ரெயில்நிலையம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், பள்ளிகூடங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவை இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் இந்த சாலை வழியாகத்தான் புதிய பஸ் நிலையம் செல்ல வேண்டும்.

அதேபோல, மணிமண்டபம், மற்றும் நாகை, திருவாரூர் பஸ்கள் அனைத்தும் இதன் வழியாகத்தான் சென்று வருகின்றன. இதனால் இந்த பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக ஏராளமான பொதுமக்கள் எந்த நேரத்திலும் காத்திருப்பார்கள்.

இதையும் படிங்க : தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

இந்நிலையில், பயணிகள் நிழற்குடை இல்லாததால் ஏராளமான பொது மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வெயிலில் மழையில் நனைந்தும் பஸ்சுக்காக காத்திருக்கும் அவலநிலை உள்ளது.

விபத்து அபாயம் :

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சாலையின் ஓரத்திலேயே பேருந்துக்காக காத்திருப்பதால் அவ்வழியே வரும் வாகனங்களால் பொதுமக்களிடையே விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

மழை, வெயில் என எல்லா நேரங்களிலும் இந்த இடத்தில் தான் சேர்ந்துகாக காத்திருக்கின்றனர். அப்பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தம் அமைத்துக் கொடுத்தால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Tanjore