தஞ்சாவூர் மாவட்டம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைகக்கழகம் மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து மூன்று நாட்களுக்கு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.
இந்த கண்காட்சியின் நிறைவு விழாவில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி தலைமையில் பதிவாளர் பேராசிரியர் பி.கே.ஸ்ரீவித்யா முன்னிலையில் நடைபெற்றது.
இந்த அறிவியல் கண்காட்சியில் பல்வேறு மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 7,500 க்கு மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 50 கல்வி நிறுவனங்களின் மூலம் பங்கு கொண்டு சிறப்பித்தனர். மேலும் தங்களுடைய 235 குறுந்திட்ட ஆய்வுகள், 1,065 போஸ்டர்கள், திட்ட ஆய்வுகள் கண்காட்சியில் இடம் பெற்றன. இக்கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாரட்டி துணைவேந்தர் பாராட்டினார்.
அப்போது பேசிய அவர், ‘மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். நவநாகரிக உலகத்தில் இன்று நாம் வாழ்கிறோம். தொழில் புரட்சியில் அறிவியல் முன்னேற்றம் வேண்டும். அறிவியலையும், மனித நேயத்தையும் வளர்க்க வேண்டும். அப்துல் கலாம் சொல்வதைபோல் கனவை நனவாக்க வேண்டும். பெரியாரின் வாழ்வியலை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் இந்த அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12 வகுப்பு படித்து வரும் கிஷோர் மற்றும் சிவ மாரிமுத்து ஆகிய இரண்டு மாணவர்களும் இணைந்து கனிணியைத் தொடாமலேயே கண்ணாலேயே இயங்க வைக்கும் கண்டுபிடிப்பை செய்துள்ளனர்.
மேலும் படிக்க : இது டைம் ட்ராவலா..? பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் தஞ்சாவூர் அரண்மனை தர்பார் ஹால்!
இது குறித்து பேசிய மாணவர்கள், ‘நாங்க இருவரும் புதுசா எதாச்சும் கண்டுபிடிக்க வேண்டும் என ஆலோசனை நடத்தினோம். அப்போது தான் பைத்தான் கோடிங் பற்றி தெரிந்து கொள்வதற்காக யூடீபில் பார்த்து கற்றுக் கொண்டோம். பின்பு மாற்று திறனாளிகள் மற்றும் பல இடங்களில் நல்ல விஷயத்திற்காக பயன்படும் வகையில் இந்த ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளோம். இது முழுக்க முழுக்க எங்களின் தனிப்பட்ட கோடிங் ஆகும். இதை செய்ய ஒரு மாதம் காலம் ஆனது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஆரம்பத்தில் தவறுகள் இருந்தாலும் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக இதை சரி செய்து உருவாக்கியுள்ளோம். இதை ஏடிஎம் மையம் மற்றும் ராணுவ பாதுகாப்பிற்காக கூட பயன்படுத்தலாம். ஏடிஎம் மையங்களில் திருட வரும் தனிப்பட்ட மனிதனின் தரவுகளை விழித்திரை வைத்து ஆதார் எண்ணை கண்டுபிடிக்க உதவும். மேலும் இதை மேம்படுத்தி தனிப்பட்ட ஒருவர் பயன்படுத்தும் வகையிலும் புது விதமான வசதிகளுடன் உருவாக்குவோம் என்று கூறினார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur