ஹோம் /தஞ்சாவூர் /

சந்தன மாலைகள் தயாரிப்பு முறைல இவ்ளோ வேலை இருக்கா? தஞ்சை வியாபாரிகள் சொல்வதை கேளுங்க..

சந்தன மாலைகள் தயாரிப்பு முறைல இவ்ளோ வேலை இருக்கா? தஞ்சை வியாபாரிகள் சொல்வதை கேளுங்க..

X
தஞ்சை

தஞ்சை

Tanjore News : தஞ்சையில் சந்தன மாலை தயாரிக்கும் பணிமும்மரம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

புத்தாண்டில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கும்போது, அவர்களுக்கு அணிவித்து கவுரவிப்பதற்காக பயன்படும் சந்தன மாலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மாலை என்றவுடன் மலர்களால் தொடுக்கப்படும் மாலைதான் உடனே ஞாபகத்திற்கு வரும். ஆனால் சந்தன மாலை, ஜவ்வாது மாலை, ஏலக்காய் மாலை, கிராம்பு மாலை, நெல்மணி மாலை என பல்வேறு வகையான மாலைகள் உள்ளன. பல வண்ண மலர்க ளைக் கொண்டு மாலை தொடுத்தாலும், அந்த மாலைகள் அடுத்த நாள் வாடி வதங்கிவிடும்.

ஆனால் சந்தன மாலைகள் காலத்துக்கும் வாடாமல் இருக்கும். அதனால் புத்தாண்டுஉள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில், முக்கிய பிரமுகர்களை சந்திக்கும்போது, அவர்களை கவுரவிக்க சந்தன மாலைகளை அணிவிப்பது வழக்கமாக உள்ளது.

இதையும் படிங்க : அந்த மனசு தான் சார் கடவுள்..! ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10,000 வாழைப்பழங்களை இலவசமாக வழங்கிய தஞ்சை விவசாயி..

இந்த சந்தன மாலைகள் 2 சரங்களில் தொடங்கி 20 சரங்கள் வரை தொடுக்கப்படும். ஒரு சந்தன மாலை அதிகபட்சமாக ரூ.1,000 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. சந்தன மாலை தயாரிக்க வம்பான என்ற ஒரு மரத்தின் துகள் தான் மூலப்பொருள். இந்த மரத்தின் துகள்களை கொண்டுஅதை மாவாக்கியபிறகு அதனோடு ஒரு பிசினையும் சேர்த்து பக்குவமாய் பிசைந்து, அதை சின்ன உருண்டைகளாக உருட்டி அதில் ஒரு சிறிய துவாரமிட வேண்டும். துவாரமிட்ட உருண்டைகளை பதமாக காய வைத்து பிறகு அதனை சந்தன பவுட ரில் நனைத்து மாலையாக தொடுக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள சர்வோதய சங்கம், காதிபவன், பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனையகம் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படும் சந்தன மாலைகளில் பெரும்பாலானவை தஞ்சை அடுத்த தண்டாங்கோரை கிராமத்தில் உள்ள கைவினை கலைஞர்களால் தொடுக்கப்பட்டு வருகின்றன. புத்தாண்டு நெருங்கி வருவதால் சந் தள மாலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.

இதுகுறித்து சந்தன மாலை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தண்டாங்கோரையை சேர்ந்த ரமேஷ் கூறும்போது, “நான் எனது சகோதரர்கள் 2 பேருடன் சேர்ந்து சந்தன மாலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடத்துபவர்கள் சந்தன மாலையை வாங்கிசெல்வார்கள்.

வழக்கமாக மாத இறுதி நாட்களில் சந்தன மாலை விற்பனை அதிகமாக இருக்கும். புத்தாண்டு தினத்தன்று முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் போது,அவர்களுக்கு அணிவிக்கசந்தன மாலையை அதிகம்பேர் வாங்கி செல்வார்கள். சந்தனமாலை விற்பனை நன்றாக தான் இருக் கிறது. ஆனால் இந்த மாலை தெடுப்பதற்கு தேவைப் படும் மூலப்பொருட்களுக்கு ஜி.எஸ்டி. வரி விதிக் கப்படுவதால் லாபம் மிக குறைவாக தான் இருக்கிறது.

நாங்கள் மொத்தமாக சர்வோதய சங்கம், காதிபவன் நிறுவனங்களுக்கு சந்தன லையை அனுப்பி வைக்கிறோம். நாங்கள் ரூ.100 முதல் ரூ.1000 வரை சந்தன பாலையை விற்பனை செய் கிறோம். முன்புகுடிசை தொழிலாக சந்தள பாலை தொடுக்கும் பணியில் பெண்கள் அதிகம் பேர் ஈடு பட்டுவந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆனால் இப்போது 100 நாள் வேலை திட்டத்திற்கு எல்லோரும் செல்வதால் சந்தன மாலை தொடுப்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை. ஏனென்றால் சந்தன மாலை தொடுக்க வழங்கப்படும் ஊதியத்தை விட 100 நாள் வேலை திட்டத்தில் கூடுதல் ஊதியம் வழங்கப்படுகிறது. சந்தன மாலை மட்டுமின்றி நெல்மணிமாலை, ஏலக்காய்மாலை, கிராம்பு மாலைகளையும் தயார் செய்து வருகிறோம்” என்றார்.

செய்தியாளர் : ஆனந்த் - தஞ்சாவூர்

First published:

Tags: Local News, Tanjore