தஞ்சை ப்ரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக நடந்த 21 வகையான நிகழ்வுகளில் 5 மாவட்ட பள்ளிகள் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்று சென்றனர்.
தஞ்சாவூர் பிரிஸ் பல்கலைக்கழகத்துல் விளையாட்டு, கலை, அறிவியல் என 21 வகையான நிகழ்வுகள்நடந்து முடந்தது. இதில் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் பலர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணத்தினால் தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் இந்த நிகழ்வுகள் நடக்காமல் இருந்ததை அடுத்து இந்த ஆண்டு நடந்த இந்த நிகழ்வுகளில் அதிகப்படியான மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர்.
மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிகொணர்ந்து, பரிசுகளையும் பெற்றனர். இதில் முதல் பரிசாக 3,000 இரண்டு பரிசாக 2,000 மூன்றாம் பரிசாக 1000 என மாணவர்களுக்கு வழங்கபட்டது. அதிக புள்ளிகள் எடுத்த பள்ளிகளுக்கு ரூ 10,000-க்கான நலத்திட்ட உதவிகளும் பிரிஸ்ட் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில்:
மாணவர்களின் திறமையை வெளிக் கொணரும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்வதற்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் நடத்த முடியாது சூழலில் இந்த ஆண்டு நடத்த ஏற்பாடு செய்தோம் நினைத்ததை விட அதிக மாணவர்கள் கலந்து கொண்டு மேலும் எங்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர்.
தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர்களை புதிய வகையான போட்டிகளில் பங்கேற்க வைத்து மாணவர்களின் திறமையை வெளிக் கொண்டு வந்து மிகப்பெரிய உயரங்களை சென்றடைய செய்வோம் என்று கூறினார்கள்.
செய்தியாளர்: ஆனந்த் (தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Tanjore