முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை மக்களுக்கு குட் நியூஸ்.. இனி மக்கள் குறைகளை மொபைல் ஆப் மூலம் தெரிவிக்கலாம்.. வழிமுறை இதோ..!

தஞ்சை மக்களுக்கு குட் நியூஸ்.. இனி மக்கள் குறைகளை மொபைல் ஆப் மூலம் தெரிவிக்கலாம்.. வழிமுறை இதோ..!

X
மக்கள்

மக்கள் குறைகளை மொபைல் ஆப் மூலம் தெரிவிக்கலாம்

Thanjavur News | தஞ்சையில் எல்லா பிரச்சினைகளுக்கும் இந்த ஒரு ஆப் போதும். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைகளையும், மனுக்களையும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தும் வகையில் புதிய இணையதள சேவையை மேயர் சண்.ராமநாதன் அறிமுகம் செய்து தொடங்கி வைத்துள்ளார்.

இதுகுறித்து தஞ்சை மாநகராட்சி மேயர் கூறுகையில், "தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் 51 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்தவாறு குறைகளை இந்த புதிய செயலியில் தெரிவிக்கலாம். குப்பைகள் இருந்தாலோ, கழிவுநீர் தேங்கியிருந்தாலோ, கால்நடைகளால் தொல்லை ஏற்பட்டாலோ புகைப்படங்களுடன் தெரிவித்தால் உடனடியாக குறைகள் நிவர்த்தி செய்யப்படும். செயலில் பதிவான குறைகளை மேயர் தொடங்கி அனைத்து பிரிவு அதிகாரிகளும் கண்காணிப்பதால் உடனடியாக பிரச்சனையை தீர்வு செய்ய முடியும்.

இந்த செயலி தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் முறையையும் கொண்டு வந்துள்ளோம். மேலும், விரைவில் இந்த செயலி மூலம் பொதுமக்கள் குடிநீர், சொத்துவரிகளையும் செலுத்த ஏற்பாடு செய்யப்படும்.

இந்த செயலி மூலம் பெரும்பாலானோர் மாநகராட்சி அலுவலகம் வராமலேயே பிரச்சனைகளையும் குறைகளையும் எளிதில் தீர்ப்பதால் வயதானவர்கள் இணையதளம் பயன்படுத்த தெரியாதவர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு எந்த நெருக்கடியும் இன்றி சுலபமாக மனுக்களை கொண்டு என்னை சந்திக்க வசதியாக இருக்கும்" என அவர் கூறினார்.

First published:

Tags: Local News, Thanjavur