முகப்பு /தஞ்சாவூர் /

மது அருந்தும் பாராக மாறிவிட்டதா தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா? பொதுமக்கள் வேதனை..

மது அருந்தும் பாராக மாறிவிட்டதா தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா? பொதுமக்கள் வேதனை..

X
தஞ்சை

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா

Tolkappiyar Square Park | தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா மீண்டும் புத்துயிர் பெறவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சையில் ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா முறையான பராமரிப்பு இல்லாததாலும், மது குடிப்போரின் அட்டூழியங்களாலும் பொதுமக்கள் வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

தமிழ்நாட்டின்முக்கிய சுற்றுலா தலங்களில்ஒன்றாக தஞ்சை மாவட்டம் திகழ்கிறது. 1995-ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக தஞ்சையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் பெயரில் மணிமண்டபம் கட்டப்பட்டது.

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா

இது தவிர மற்றொரு சுற்றுலா தலமாக ரூ.75 லட்சம் செலவில் தஞ்சை - நாகை சாலையில் தொல்காப்பியர் சதுக்கத்தில் பூங்காவுடன் கோபுரம் அமைக்கப்பட்டு, செயற்கை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் இந்த பூங்காவிற்கு வருவார்கள்.

இதையும் படிங்க : தஞ்சை மருத்துவக்கல்லூரியில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆள்சேர்ப்பு முகாம்.. எப்போ தெரியுமா?

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்த காலத்தில் இந்த தொல்காப்பியர் பூங்காவும் மூடப்பட்டது. எனினும், இன்று வரை திறக்காமல் இருப்பதால் பூங்கா முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்த இப்பூங்காவை மது அருந்தும் கூடாரமாக பலர் பயன்படுத்தி வருகின்றனர். குடித்துவிட்டு பாட்டில்களை இங்கேயே உடைத்து போடுவது போன்ற அசம்பாவித செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், இந்த பூங்காவில் உள்ள லிஃப்ட் பல ஆண்டுகளுக்கு முன்பு பாதியிலேயே நின்று பழுதடைந்தது. ஆனால் இதுவரை இந்த லிப்ட் பழுதுபார்க்காமல் கிடப்பிலேயே உள்ளது. மேலும், பூங்காவை சுற்றிலும் செடி கொடிகள் வளர்ந்து விஷ ஜந்துகள் தங்குவதற்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. எனவே பூங்காவை பழைய நிலைக்கு கொண்டு வர முறையான பராமரிப்பு செய்து புது பொலிவுடன் மாற்றி அமைக்கப்படுமா என்ன பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    First published:

    Tags: Local News, Thanjavur