Home /thanjavur /

காய்கறி சாகுபடியில் அசத்தல் வருமானம்.. விவசாயத்துக்காக ஊரை விட்டுவிட்டு வயலுக்குள் குடியேறிய குடும்பத்தினர்..

காய்கறி சாகுபடியில் அசத்தல் வருமானம்.. விவசாயத்துக்காக ஊரை விட்டுவிட்டு வயலுக்குள் குடியேறிய குடும்பத்தினர்..

விவசாயத்துக்காக

விவசாயத்துக்காக கிராமத்தை விட்டு வயலுக்குள் குடியேறிய குடும்பத்தினர்.

Thanjavur District News : தஞ்சை ஒரத்தநாடு அருகே பாய்ச்சூர் கிராமத்தில் விவசாயத்துக்காக ஊரை விட்டுவிட்டு வயலுக்குள் குடியேறிய குடும்பத்தினர் மீன் வளர்ப்பு, நெல் விவசாயம், காய்கறி சாகுபடி, ஆடு, மாடு வளர்ப்பு என இயற்கை முறையிலான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்...

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur
ஊரும் வேணாம்.. யாரும் வேணாம்.. விவசாயம் மட்டுமே போதும் என பாரம்பரிமாக வாழ்ந்து வந்த வீட்டை விட்டுவிட்டு விவசாயத்திற்காக ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள வயல்வெளிக்கு நடுவே வீட்டை அமைத்து, காய்கறி சாகுபடி‌, ஆடு, மாடு, பறவைகள் வளர்ப்பு,  மீன் வளர்ப்பு, பால் விற்பனை, நெல் விவசாயம் என விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து சாதித்து வரும் தஞ்சாவூரை சேர்ந்த குடும்பத்தினர் குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாச்சூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஏழுமலை மற்றும் அவர் குடும்பத்தினர், நெல் சாகுபடி மட்டுமின்றி காய்கறி சாகுபடியிலும் மிக நேர்த்தியான முறையில் செய்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு‌ முன்னதாகவே மார்க்கெட்டில் காய்கறிகளை மொத்தமாக விலைக்கு வாங்கி ஆட்டோவில் எடுத்துக்கொண்டு ஒரத்தநாடு பகுதி‌ மக்களிடம் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமிகுதியால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீன் வளர்பிற்காக பாச்சூர் கிராமத்தில் இருக்கும் குளத்தைகுத்தகைக்கு வாங்கினர்.

மீன் வளர்ப்பு - காய்கறி சாகுபடி:

மீன்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகி நல்ல வருமானம் கிடைக்க தொடங்கி, இயற்கை முறையில் மீன் வளர்க்கப்படுவதால் சுற்றுப்புற கிராம மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. எத்தனை நாட்கள் தான் காய்கறிகளை வாங்கி விற்பது என்ற எண்ணத்தால் விவசாயி மணிகண்டன் பின்பு சொந்த நிலத்திலேயே காய்கறி சாகுபடி செய்து தற்போது வெண்டைக்காய், புடலங்காய், பாகற்காய், கத்திரிக்காய், மிளகாய், சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்து தற்போது காய்கறி சாகுபடியில் சாதித்து வருகிறார்.

அது மட்டுமின்றி இவர், தனது தந்தை செய்து வந்த பால் வியாபாரத்தையும் தற்போது மணிகண்டனின் சகோதரர் செய்து வருகிறார். இவருடைய தந்தை தற்போது ஆடு, மாடுகளை பராமரித்து வருகிறார். இவரின் தாயார் முழுநேரமாக விவசாய பணிகளில் உதவி வருகிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவ்வாறு குடும்பத்தில் அணைவரின் ஒத்துழைப்பினால் தற்போது பாச்சூர் கிராமத்தில் விவசாயத்தில் நல்ல ஒரு இடத்தினை பிடித்துள்ளார்கள் இக்குடும்பத்தினர்,

தங்களது வயலில் விவசாயம், உப தொழில்கள் மும்முரமாக இருப்பதனால் தினமும் வீட்டிற்கும் வயலுக்கும் இடையேயான பயண தூரம் இடையூராக இருந்ததால் தற்போது வயல் இருக்கும் பகுதியிலேயே ஒரு குடிசை வீட்டை அமைத்து முற்றிலும் இயற்கை ததும்பும் அமைதியான சூழலில் விவசாயம் மற்றும் ஆடு, மாடு, பறவைகள், குளத்தில் மீன்களை வளர்த்து இயற்கையோடு உரையாடி வாழ்ந்து வருகின்றனர் இக்குடும்பத்தினர். இங்கு மின்சார வசதி இல்லாததால், சிறிய அளவில் சூரிய மின்சக்தி தகடு அமைத்து அதில் இருந்து தங்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்கின்றனர்.  இவர்களின் குடிசை பகுதிக்கு பின்புறம் மீன் வளர்ப்புக்காக குத்தகைக்கு எடுத்த குளம் அமைந்திருப்பதால் எப்போது ஜில்லென்ற சீதோஷ்னம் இங்கு நிலவுகிறது, தங்களுக்கு இதைவிட வேறு என்ன தேவை என மன திருப்தியுடன் கூறுகின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Agriculture, Local News, Thanjavur

அடுத்த செய்தி