Home /thanjavur /

எருமை மாடு வளர்ப்பில் இவ்வளவு லாபமா? சாதித்து காட்டிய தஞ்சை விவசாயி 

எருமை மாடு வளர்ப்பில் இவ்வளவு லாபமா? சாதித்து காட்டிய தஞ்சை விவசாயி 

தஞ்சாவூர்

தஞ்சாவூர் - எருமை மாடு வளர்ப்பு

Thanjavur District News | எருமை மாடு வளர்பை முந்தைய காலத்தை விட தற்போது வளர்பதற்கு தயங்குகிறார்கள். கஷ்டத்தை பார்க்காமல் வளர்த்தால் அதிக லாபம் பெறலாம் என்கிறார் தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு அருகேயுள்ள செம்மனங்கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்ரமணியன்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
"எருமை மாடு" இந்த வார்த்தையை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளாத ஆள் இருக்க முடியாது. ஆனால்  எருமை மாடு வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் எருமை மாட்டு பாலின் நன்மைகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எருமை மாடு வளர்த்து நல்ல லாபம் ஈட்டி வரும் தஞ்சை விவசாயி கூறுவதை தெரிந்து கொள்வோம்..

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள செம்மனங்கோட்டை கிராமத்தில் வசித்து வரும் சுப்ரமணியன். விவசாயம், எருமை மாடு, ஆடு வளர்ப்பு  மற்றும், டீ கடை ஆகிய தொழில்களை இவர் செய்து வருகிறார்.

கடந்த 30 வருடங்களுக்கு முன்பு எருமை மாடு ஒன்றை வாங்கி வளர்த்த இவர் தற்போது 25 மாடுகளை தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.

எருமை மாட்டு பாலை கொண்டு டீ கடை நடத்தி வரும் இவர் கடையின் முலம் ஒரு நாளைக்கு கிடைக்கும் சுமார் 4,000 ரூபாய் வருமானத்தை வைத்து 8 ஏக்கரில் விவசாயம் செய்து லாபம் ஈட்டி வருகிறார்.

எருமை மாடு வளர்ப்பு


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எருமை மாடுகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காக எருமை பாலினை விற்காமல் கடைக்கு தேவையான அளவு பாலினை எடுத்துக்கொண்ட பின்பாக அதிக அளவில் கன்று குட்டிகளுக்கே தருகிறார் இவர்.

எருமை மாடுகள் மூலம் கிடைக்கும் லாபம்:

எருமை மாட்டு சாணத்தை மீன் பண்ணைகளுக்கு விற்பது, பாலை பயன்படுத்தி டீ கடையிலிருந்து பெறும் வருவாய், எப்போதாவது வயதான மாட்டினை விற்பது.    ஒரு நாளைக்கு பாலின்‌ மூலம் 2,000 முதல் 4,000 வரை லாபம் ஈட்டுகிறார்.
ஒரு யூனிட் மாட்டு சாணம் ரூ.3,500 - ரூ.4,000 க்கு வரை பெறுகிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எருமை மாட்டு பாலின் நன்மைகள்:

இந்தியா  மட்டுமல்லாது  உலக நாடுகளில், பெரும்பாலான மக்கள் தங்கள் ஆரோக்கியத்திற்காக எருமை பாலையே  பயன்படுத்துகின்றனர். ஏனெனில், எருமை பாலில் புரோட்டின், கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, இவற்றுடன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் A மற்றும் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக பசும்பாலில் இருப்பதைவிட சற்று அதிகமான கொழுப்புச்சத்தும் கொண்டது எருமை மாட்டு பால். ஆனால் குழந்தைகளுக்கு இந்த பாலினை குடுப்பதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது சிறந்ததாகும்.

எருமை மாடு வளர்ப்பு


எருமை மாடு வளர்ப்பு முறை:

எருமை மாடு வளர்பில் ஈடுபடும் போது சகிப்புத்தன்மை அதிக அளவில் இருக்க வேண்டும், மாடுகளுக்கு தீவனம் அதிகமாக தராமல் வயல் வெளிகளில் மேய்பதே சிறந்ததாகும், மேலும் மாடுகளுக்கு ஏற்படும் நோய் தொற்றினை முன்பே அறிந்து செயல்பட வேண்டும்.

எருமை மாடு வளர்ப்பு குறித்து விவசாயி சுப்ரமணியன் கூறியதாவது:

எருமை மாடு வளர்பை முந்தைய காலத்தை விட தற்போது வளர்பதற்கு தயங்குகிறார்கள், பசு மாடு வளர்பை ஒப்பிடுகையில் எருமை மாடு வளர்ப்பு மிகவும் கடினமானதால், வளர்பதற்கு யாரும் முன்வர மறுக்கிறார்கள். பசு மாட்டு பாலை விட எருமை பால் 10 ருபாய் அதிக விலைக்கு போகிறது. கஷ்டத்தை பார்க்காமல் வளர்த்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறினார்.
Published by:Arun
First published:

Tags: Business, Business Idea, Local News, Thanjavur

அடுத்த செய்தி