தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே சோழபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 105 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கட்டிட வசதி மிக குறைவாகவே உள்ளது. மேலும் இங்கு உள்ள கட்டிடங்கள் மழைக்காலங்களில் சேதமடைந்து நீர் வடிந்து கீழே விழுகிறது. மேலும் தலைமை ஆசிரியர் அறையில் தடுப்புகள் அமைத்து 6ம் வகுப்பும், கணினி ஆய்வகமும் அங்கேயே செயல்பட்டு வருகிறது. மேலும் அலுவலக பயன்பாட்டிற்கும் இதே கட்டிடத்தில் தான் செயல்படுகிறது.
இதனால் வகுப்பறை வசதி பற்றாக்குறையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தினம் தினம் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கணினி ஆய்வக வகுப்பிற்கு மற்ற வகுப்பு மாணவர்கள் வரும்போது இட பற்றாக்குறையால் 6ம் வகுப்பு மாணவர்கள் வகுப்புக்கு வெளியே சென்று வராண்டாவில் படிக்கும் நிலையும் ஏற்படுகிறது. மேலும் இப்பள்ளியில் பெஞ்ச், நாற்காலி போன்றவைகளும் மிக குறைவான அளவில் இருப்பதாகவும் ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பள்ளி எஸ்.எம்.சி. தலைவி நயந்தி கூறுகையில், “எஸ்.எம்.சி.மூலமாக அனைத்து கோரிக்கைகளையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுக்கு அனுப்பியுள்ளோம். அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே, தாமதப்படுத்தாமல் விரைவில் மாணவர்களின் நலனை கருத்தி வகுப்பறை வசதிகளை அமைத்து தர வேண்டும். இதனை பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்த்துள்ளனர்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur