தஞ்சாவூர் மாநகராட்சியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கிற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு அம்சங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக ராஜப்பா பூங்கா, அருங்காட்சியகம், பறவைகள் பூங்கா ஆகியவை ஏற்கனவே துவங்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், சிறுவர்களுக்காக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் சிறுவர்கள் விளையாட்டு அரங்கம் செயல்படுத்தியுள்ளது. இதில் குழந்தைகள் விரும்பும் வகையில் ரியல் கேமிங் விளையாட்டு சாதனங்கள் மற்றும் கீழே விழுந்தாலும் அடிபடாத வகையில் முழுவதும் பஞ்சும் பந்துகளும் நிறைந்து குழந்தைகளை மகிழ்ந்து விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த விளையாட்டு அரங்கத்தை பற்றி ஆரம்பத்தில் பெற்றோர்களுக்கு பெரிதளவில் இப்படி ஒரு இடம் இருப்பதெல்லாம் தெரியாமல் இருந்தது. தற்போது சோஷியல் மீடியாவில் பலரும் இங்கு வந்து வீடியோ பதிவிடுவதால் இதை பார்த்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அதிக அளவில் அழைத்து வருகின்றனர். இதற்கு கட்டனமாக ஒவ்வொரு விளையாட்டிற்கும் 30 நிமிடத்திற்கு ரூ.50 பெறப்படுகிறது.
கோடை விடுமுறை தினம் என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரிலிருந்து இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் தங்களது குழந்தைகளை இங்கு அழைத்து வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore