Home /thanjavur /

சோழர்களின் போர் தெய்வம் தஞ்சை நிசம்பசூதனி அம்மன் பற்றி தெரியுமா?.. காரிய வெற்றி கிடைக்க இங்கு வழிபட்ட சோழ மன்னர்கள்..

சோழர்களின் போர் தெய்வம் தஞ்சை நிசம்பசூதனி அம்மன் பற்றி தெரியுமா?.. காரிய வெற்றி கிடைக்க இங்கு வழிபட்ட சோழ மன்னர்கள்..

தஞ்சை

தஞ்சை நிசம்பசூதனி அம்மன்.. சோழர்களின் போர் தெய்வம்

Thanjavur Vanabathrakali Nisumba Soothani Amman Kovil | சோழ மன்னர்கள் போர்களுக்கு செல்லும் முன்னர் தஞ்சையிலுள்ள நிசம்பசூதனி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு செல்வார்களாம்.. இதனால் அவர்களுக்கு காரிய தடைகள் அகன்று வெற்றிகள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இக்கோவிலில் வழிபடுபவர்களுக்கும் காரிய தடைகள் அகன்று வெற்றிகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
சோழ மன்னர்களின் வெற்றி தெய்வமாக வடபத்ரகாளி (எ) நிசம்பசூதனி அம்மன் கோயில் இருந்துள்ளது. திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளின் மூலம் தஞ்சை நகரில் சோழர் ஆட்சி மலரும்போதே நிசும்பசூதனி தேவி என்கிற வடபத்ர காளியம்மன் திருக்கோயிலும் எழுந்தது தெரிய வருகிறது.

சோழனின் மகனான விஜயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசராக உறையூரில் பதவி ஏற்றார். இவரே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவர். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப் போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினார்.

இந்த சமயத்தில் எதிரிகள் விஜயாலய சோழனை எதிர்த்து நேரடியாக போரிட முடியாததால், சில சில துஷ்ட சக்திகள் மூலம் சோழனுக்கு சில மன உளைச்சல்களை ஏற்படுத்தியதால் போரின் போது சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னர் அவருடைய ஆச்சாரியர்களிடம் கேட்ட போது, இது போல் சில துஷட சக்திகள் மூலம் காரிய தடையை எதிரிகள் செய்துள்ளார்கள், இதனை சரி செய்ய நிசும்பன், சும்பன் ஆகிய அரக்கர்களை கொன்ற, நிசும்பவதம் நிசும்பசூதனி அம்மன் பற்றிய கூறியதை அடுத்து நிசம்பசூதனி அம்மனை வழிபட்டுள்ளார் மன்னர்.


தஞ்சை நிசம்பசூதனி அம்மன்.


பின்பு மன்னரின் போரின் போது உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வெற்றி மிக சுலபமாக கிடைத்துள்ளது. மன்னரின் வெற்றி தெய்வமாக மாறியுள்ளது நிசம்பசூதனி. பின்பு அம்மனுக்கு தொடர்ந்து வழிபாடு செய்து அம்மனிடம் அருளை பெற்று போர்களுக்கு சென்றுள்ளார். பின்பு தொடர்ந்து அதன் பின் வந்த நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் அம்மனை தொடர்ந்து வெற்றி தெய்வமாக வணங்கி வந்துள்ளனர். இதற்கு பின்னர் 250 வருடங்களுக்கு தஞ்சாவூர் சோழர்களின் தலைநகராக விளங்கியது.

இந்த கோயில் தற்போது தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.


தஞ்சை நிசம்பசூதனி அம்மன்.


இக்கோயிலின் சிறப்பு: வாராந்திர விஷேச நாட்களாக வெள்ளி, செவ்வாய், ஞாயிறு, ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும், மாதந்திர விஷேச நாட்களாக அமாவாசை, பெளர்ணமி , அஷ்டமி, நவமி ஆகிய நான்கு நாட்களும், அம்மனுக்கு விஷேசமான நாட்களாகும், வருடத்தில் தை மாதம், அம்மனுக்கு பால் குடம், காவடி, திருவிழா வெகு விமரிசையாக நடக்கிறது.

நிசம்பசூதனி அம்மனை தினசரி காலை 7:30 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வழிபடலாம். மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை யும் கோவில் திறந்திருக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இக்கோவில் குறித்து அக்கோயில் அர்ச்சகர் கூறுகையில்:
நிசம்பசூதனி அம்மன் பெரும் விஷேசமான அம்மனாகும், இந்த அம்மனை தொடர்ந்து 9 வாரம் வந்து வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும். சோழ தேச மன்னர்களின் வெற்றி தெய்வமாக இருந்ததால், சோழதேச மக்களுக்கம் நிசம்பசூதனி அம்மன் வெற்றி தெய்வமாக இருக்கிறாள் என்று கூறினார்.

nisambasoothan temple map
தஞ்சை நிசம்பசூதனி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியை அறிய இங்கே க்ளிக் செய்யவும்..
Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி