பயன்பாட்டுக்கு வந்த தஞ்சாவூர் புதிய காமராஜ் மார்க்கெட்டில் என்ன வசதிகள் உள்ளன? என்ன குறைகள் இருக்கின்றன? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்களை இடித்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்டப்பட்டது. ரூ.20.26 கோடி செலவில் 4.1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 87 பெரிய கடைகள், 201 சிறிய கடைகள் கட்டப்பட்டன. இது தவிர வாகனங்கள் நிறுத்துமிடம், ஏ.டி.எம் மையம், கழிவறை வசதிகளும் கட்டப்பட்டுள்ளன.
இதையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கடைகள் ஏலம் விடப்பட்டன. தொடர்ந்து ஏலம் எடுத்த கடை வியாபாரிகளுக்கு, சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருட்கள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு முதல் மார்க்கெட் செயல்பாட்டுக்கு வந்தது. அன்றிலிருந்து காலை முதலே வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் காய்கறிகளை குவித்து வைத்து விற்பனையில் ஈடுபட தொடங்கினர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக காய்கறிகள் லாரிகளில் கொண்டுவந்து இறக்கி வைக்கப்பட்டது. காய்கறிகள் விற்பனை நடைபெறுவதை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆர்வம் காட்டாத பொதுமக்கள் :
மார்க்கெட் பயன்பாட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆகிய நிலையில் காய்கறிகளை வாங்க பொதுமக்களின் கூட்டம் பெரிதளவில் இல்லை என வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளநிலையில் பண்டிகையில் நல்ல வியாபாரம் நடக்கும் என எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க : தஞ்சை பெரிய கோயிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..
காய்கறிகள் அழுகும் அவலம் :
இந்த கடையின் அமைப்பும், வசதிகளையும் குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘ஒவ்வொரு பிளாக்காக கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் பின்புறம் உள்ள கடை தெரியாதவாறு மூன்று புறமும் சுவர்கள் அமைக்கப்பட்டது. கடை சிறிய அளவில் இருந்தாலும் பரவாயில்லை. பின்புறம் உள்ள கடைகள் தெரியாததால் மக்களுக்கு எந்த கடைகள் இருக்கிறது என்பது காண முடியாமலே இருக்கிறது. பல தூரம் சுற்றி வரவும் யாரும் விரும்பவில்லை.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
எனவே முதலில் இருக்கும் கடைகளில் மட்டுமே காய்கறி மற்றும் பொருட்களை வாங்கி செல்கின்றனர். மேலும் கடைகளில் முன்புறம் காய்கறிகளை வியாபாரம் செய்யும் நிலையில் ஷீட் அமைக்காததால் வெயில் பட்டு காய்கறிகள் அழுகி வருகிறது” என வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே மாநகராட்சி ஆணையரும், மேயரும் இந்த வசதிகளை ஏற்படுத்தி தந்தால் பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore