முகப்பு /தஞ்சாவூர் /

இருளில் மூழ்கும் நாஞ்சிக்கோட்டை சாலை.. நடவடிக்கை எடுக்குமா தஞ்சை மாநகராட்சி?

இருளில் மூழ்கும் நாஞ்சிக்கோட்டை சாலை.. நடவடிக்கை எடுக்குமா தஞ்சை மாநகராட்சி?

X
இருளில்

இருளில் மூழ்கும் நாஞ்சிக்கோட்டை சாலை

Thanjavur Nanchikottai Road : மின் விளக்கு வசதி அமைக்கப்படாத தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையால் இருளில் தவிக்கும் பொதுமக்கள். 

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மாநகரம் முழுவதும் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு புதிதாக சாலைகள், நடைபாதைகள், வடிகால் வசதி, அங்காங்கே ரெட் சிக்னல்களும் பொருத்தப்பட்டுள்ளது..மேலும் சில இடங்களில் அதற்கான பல பணிகளும் நடந்து வருகிறது.

அந்த வகையில் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவுபடுத்தப்பட்டு புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது. நாஞ்சிக்கோட்டை சாலையானது பைபாஸ், ஈபி காலனி, கருணாநிதி நகர், ஆவின் பால் பண்ணை, பர்வீன், அண்ணாநகர்,உழவர் சந்தை, கல்லுக்குளம், மேரீஸ் கார்னர், கான்வென்ட், ரயிலடி, ஆத்துப்பாலம், இறுதியில் பழைய பேருந்து நிலையம் வரை 12 பேருந்து நிறுத்தங்களை கொண்டுள்ளது.

இருளில் மூழ்கும் நாஞ்சிக்கோட்டை சாலை

தஞ்சையின் மிக பகுதியாகவும், பொதுமக்கள் அதிகம் சென்று வரும் பரபரப்பான சாலையாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் நாஞ்சிக்கோட்டை பைபாஸ், கருணாவதி நகர்,ஈ.பி காலனி, ஆவின் பால் பண்ணை, பர்வின் வரை சுமார் 3.கி.மீ தூரத்திற்கு இதுவரையில் முறையான மின் விளக்கு வசதி அமைக்கப்படாமலே இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனால் இரவு நேரங்களில் வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பலமுறை இதன் காரணமாக விபத்துகளும் நடந்துள்ளது என அப்பகுதி சேர்ந்த மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியை கவனித்து முறையாக மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என்பதை கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.

    First published:

    Tags: Local News, Thanjavur