முகப்பு /தஞ்சாவூர் /

பாஜகவை கண்டித்து தஞ்சையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

பாஜகவை கண்டித்து தஞ்சையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

X
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம்

Thanjavur District | திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தாக்கப்பட்டதை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் தஞ்சாவூரில் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின்  சார்பில் தஞ்சை நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் பாஜகவினர் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டதாக கூறி அதை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறை கூவல் விடுத்த நிலையில் தஞ்சையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரிபுராவில் தேர்தலுக்குப் பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடது முன்னணி மற்றும் எதிர்க்கட்சி ஊழியர்களுக்கு எதிராக பாஜகவினரால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனமான வன்முறை வெறியாட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறுது என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகர செயலாளர் வடிவேலன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் அபிமன்னன் முன்னிலை வகித்தார்.இதில் தஞ்சை ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 20- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து காவல் மாற்று பாதையை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

First published: