மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோவில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. காய்கறி, பழங்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் 108 பசுக்களுக்கு பூஜை நடைபெற்றது. பெரியகோவிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
உழவர்களுக்கு உதவி செய்யும் காளைகளுக்கு நன்றி கூறும் விதமாக நேற்றைய தினம் மாட்டு பொங்கல் விழாவில் மாடுகளுக்கு மரியாதை செய்யப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது...
தஞ்சை பெரிய கோயிலில் நேற்று மாட்டுமாட்டுப்பொங்கல் பண்டிகையையொட்டி நேற்றைய தினம் காலையில் பலவித வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சவ்சவ், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய், வெண்டைக்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும் பிரம்மாண்ட நந்தியின் கழுத்தை சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டது.
ஆரஞ்சுபழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா, அன்னாசிப்பழம் போன்ற பலவகையான பழங்களாலும், முறுக்கு மற்றும் பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்தியம்பெருமானுக்கு அணிகலன்கள் போல அலங்காரம் செய்யப்பட்டது. சந்தன காப்பு பூசப்பட்ட நந்தியின் முகம் ஜொலித்தது. இதனையடுத்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மொத்தம் 700 கிலோ காய்கறிகள், மலர்கள், இனிப்புகள், பழங்களால் நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டதை காணவே அற்புதமாக இருந்தது.
மாட்டுப்பொங்கலையொட்டி 108 பசுக்களுக்கு பூஜை நடைபெற்றது. நந்தியம்பெருமான் சிலை முன்பு பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, மாடுகள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது. மேலும் மாடுகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் நந்தியம்பெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மாட்டு பொங்கலை முன்னிட்டு விடுமுறை நாள் என்பதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வந்து பிரகதீஸ்வரரை தரிசனம் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pongal 2023, Thanjavur