தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அடுத்த குருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த இவர் விவசாயத்தின் மேல் உள்ள காதலால் பெற்றோருக்கு உதவியாக விவசாயம் செய்து வந்துள்ளார்.
விளையாட்டிலும் பெரும் ஆர்வம் கொண்ட இவர் கராத்தே பயிற்சிகளை மேற்கொண்டு, கராத்தே மாஸ்டர் ஆகவும் பயிற்சி அளித்துள்ளார். பின்பு கொரோனா காலகட்டத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், நாட்டுக் கோழி வளர்ப்பதில் ஆர்வம் கொண்டுநாட்டுக்கோழி பண்ணை வைத்துள்ளார்.
தொடக்கத்தில் கோழி வளர்ப்பு முறை தெரியாமல் பெரியளவில் லாபமும் இல்லாமல் தவித்திருக்கிறார். இருந்தும் தொடர்ந்து முயற்சியை மட்டும் கைவிடவில்லை. பின்பு அதிலுள்ள நுணுக்கங்களை கற்றுக் கொண்டு தற்போது 100க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். இதைவிட பெரிய அளவில் இவருக்கு நாட்டு கோழி பண்ணை வைக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.
மேலும் படிக்க : மூலிகை சூப், படகு சவாரி, இயற்கையின் பேரழகு... சுவைக்க.. ரசிக்க சிறந்த சுற்றுலா தலம் கொல்லிமலை!
இவருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற மிகப் பெரிய கனவு உள்ளது. போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்று தஞ்சைக்கு மேலும் பெருமையை சேர்க்க வேண்டும் என்ற ஆசையும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றது.
மேலும் படிக்க : தஞ்சை திங்களூர் சந்திர பகவானுக்குரிய பரிகார தலம்.. சிறப்புகள் என்ன?
அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் இவர், மாரத்தான் போட்டி, ஓட்டப்பந்தயம் எந்த ஊரில் நடந்தாலும் கலந்துகொண்டு பரிசுகளையும் பெற்று வருகிறார். ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று தன் கிராமத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களையும் நல்ல நிலைக்கு முன்னேற்றி கொண்டுவர வேண்டும் என இவரின் மற்றொரு ஆசையாகவும் உள்ளது.
இவர் தற்போது விவசாயம், முந்திரி தோப்பு, கோழி பண்ணை ஆகிய வேலைகளை செய்து வருகிறார். இவர் கோழி வளர்க்கும் சூழல் மிகவும் அருமையாக அமைந்துள்ளது. அதாவது விவசாயம், கரும்பு தோட்டம், முந்திரி தோட்டம் என சுற்றிலும் இயற்கையாக இருப்பதால் கோழிகள் இயற்கையாகவே தீவனங்களைத் தின்று நோயின்றி வளர்கிறது.
மேலும் படிக்க : இது நல்லா இருக்கே... இந்த திருப்பூர் பேருந்து பெட்ரோல்-டீசலில் ஓடாதாம்!
அதனாலேயே அவரிடம் சுற்றியுள்ள கிராமங்களையும் தாண்டி தொலைவில் உள்ளவர்களும் தேடி வந்து கோழிகளை வாங்குகிறார்கள். விளையாட்டு, விவசாயத்தின் மீது உள்ள காதல், கோழிப்பண்ணை, தினமும் 10 கிலோமீட்டர் ஓட்டப் பயிற்சி என தினமும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியில் சுழன்று வருகிறார் இந்த இளைஞர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தற்போதைய 2k கிட்ஸ் பலர் சிறுவயதிலேயே செல்போனுக்கு அடிமையாகி தவறான பாதைகளில் சென்று விடுகின்றனர். இதனால் பலர் பாதியிலேயே வாழ்க்கையை இழக்கின்றனர். இது போன்று செல்பவர்களுக்கு மத்தியில் பத்தாம் வகுப்பு படித்திருக்கும் இவர் விவசாயம், ஒலிம்பிக் போட்டி கனவு என ஒவ்வொரு நாளும் தன்னை செதுக்கிக் கொண்டு வருவது பிறருக்கு உந்துதலாக அமைவது குறிப்பிடட்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur