ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் 'குரங்கு மண்டபம்'.. இதை கட்டியது மராட்டிய மன்னரா? சோழ மன்னரா?

தஞ்சாவூர் 'குரங்கு மண்டபம்'.. இதை கட்டியது மராட்டிய மன்னரா? சோழ மன்னரா?

தஞ்சாவூர்

தஞ்சாவூர் 'குரங்கு மண்டபம்'

Thanjavur Kurangu Mandapam | தஞ்சை மாரியம்மன் கோவிலுக்கு பின்புறம் மன்னர்கள் காலத்தில் நேர்த்தியான கட்டிடக்கலையில் கட்டப்பட்ட மண்டபம் ஒன்று ‘குரங்கு மண்டபம்’ என்று பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான குரங்கு மண்டபம் தற்போது பராமரிப்பு இன்றி அழிந்து வருகிறது.

தஞ்சை மாரியம்மன் கோவிலுக்கு பின்புறம் மன்னர்கள் காலத்தில் நேர்த்தியான கட்டிடக்கலையில் கட்டப்பட்ட மண்டபம் ஒன்று ‘குரங்கு மண்டபம்’ என்று பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இது சோழ மன்னர்கள் கட்டியதா இல்லை மராட்டிய மன்னர்கள் கட்டியாதா, எந்த ஆண்டு கட்டப்பட்டது என்ற எந்த ஒரு தகவலும் இல்லாமல் உள்ளது. இது குறித்து நாம் நேரில் பார்த்த சில தகவல்களும் மாரியம்மன் கோவில் பகுதியில் வசிக்கும் சிலர் கூறியதையும் பின்வருமாறு காணலாம்:

இந்த மண்டபத்தில் 12 தூண்கள் இருக்கிறது அழகான கட்டிடக்கலையில் நேர்த்தியான முறையில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தில் இரண்டு சுரங்க பாதைகள் உள்ளது. இதில் மண்டபத்தின் மேற்கு திசையில் இருக்கும் ஒரு சுரங்கப்பாதையானது தஞ்சை மராட்டிய அரண்மனைக்கு செல்லும் பாதையாகவும், கிழக்கு திசையில் இருக்கும் அதாவது மாரியம்மன் கோவில் இருக்கும் திசையில் இருக்கும் மற்றொரு சுரங்க பாதை மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் பாதையாகவும் செவி வழியே வந்த செய்தியாகும்.

மேலும் படிக்க:  சோழர்கள் தங்கைக்கு சீதனமாக கொடுத்த இடம் எப்படி சமயபுரம் கோவிலாக மாறியது.!

மன்னர் காலத்தில் ராணிகள் இந்த சுரங்கப் பாதை வழியாக தான் தஞ்சை அரண்மனையில் இருந்து இந்த குரங்கு மண்டபத்துக்கு வருவதாகவும், மாரியம்மன் கோவிலுக்கு செல்வதாகவும் மேலும் ராணிகள் மட்டுமே அதிக அளவில் பயண்படுத்த கூடிய பாதையாகவும் அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகின்றனர்.

மேலும்  இந்த மண்டபத்தில் சில முக்கிய விழாக்களும், தீர்ப்பு வழங்கும் இடமாகவும் இருந்து வந்துள்ளது.. இதற்கு ராணி மண்டபம் என்று மற்றொரு பெயரும் உண்டு என்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகின்றனர்.

மேலும் படிக்க:  திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!

இவ்வளவு பழமையான இந்த மண்டபத்தை அரசு பராமரிக்க தவறியது வருத்தமாக உள்ளது எனவும், 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கைப்பற்றி பராமரித்திருந்தால் கூட தற்போது பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக மாறியிருக்கும் எனவும் கூறியுள்ளார்கள்.. தற்போது இந்த மண்டபம் மிகவும் மோசமான நிலையில் சிதிலமடைந்து இருந்தாலும்... இந்த மண்டபத்தை கட்டியது யார் என்றே தெரியாமல் உள்ளது ஏக்கமடைய செய்கிறது எனவும்‌ தஞ்சையை சேர்ந்த பலர் கூறுகிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது இந்த மண்டபம் கடந்த ஆண்டு தஞ்சை கலெக்டர் அரசுடைமை ஆக்கி வரலாற்று ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur