ஹோம் /தஞ்சாவூர் /

உயிர் பலி வாங்கும் கல்லணை கால்வாய்.. பதறும் கிராம மக்கள்..

உயிர் பலி வாங்கும் கல்லணை கால்வாய்.. பதறும் கிராம மக்கள்..

கல்லனை

கல்லனை கால்வாய் ஊரணிபுரம் 

Thanjavur Kallanai Canal | தஞ்சாவூர் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம், உஞ்சியவிடுதி வெள்ளதேவன் விடுதி சாலையில் உள்ள கல்லனை கால்வாய் ஆற்றில்‌ ஏற்படும் ஆபத்தான சுழலில் சிக்கி பல உயிரலந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை அருகே உள்ள கல்லனை கால்வாய் ஆற்றில்‌ ஏற்படும் ஆபத்தான சுழலில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது...

தஞ்சாவூர் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம், உஞ்சியவிடுதி வெள்ளதேவன் விடுதி சாலையில் உள்ள கல்லனை கால்வாய் ஆற்றில்‌ ஏற்படும் ஆபத்தான சுழலில் சிக்கி பல உயிரலந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது..

இந்த ஆற்றில் உள்ள தளத்தில் கீழ் மிகப்பெரிய பள்ளம் உள்ளது , இதை அறியாத இளைஞர்கள் இதில் ஆபத்தை உணராமல் குளித்து வருகிறார்கள், இந்த சுழலானது ஆற்றின் மையப்பகுதியில் இருப்பதால் குளிக்க செல்லும் போது சுழற்‌றி திரும்ப திரும்ப அதே இடத்தில் சுற்றி உள்ளே தள்ளுகிறது...பிறகு   5 கி.மீ தூரம் அடித்து செல்லப்படுகிறது ... இறந்தவர்களின் உடலை மீட்பது கூட  கடினமான ஒன்றாக இருக்கிறது... கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூட ஒரு இளைஞர் சுழலில் சிக்கியுள்ளார்..மேலும் வைக்கப்பட்ட ஒரு விளம்பர பலகையும் குடிகாரர்கள் திருடிவிட்டனர்...

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் போற்றும் பழையாறை - சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

இது போன்ற.. மிகப்பெரும் மோசமாக இப்பகுதி இருந்து வருகிறது...

மேலும் இது குறித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதில் இறந்த இளைஞரின் தாய் மாமா கூறுகையில்:

கல்லணை கால்வாய்

மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு, என் தங்கச்சி பையன் இரண்டு பேர் திருச்சி திருச்சி ஊருக்கு இங்க வந்தாங்க நல்லா நீச்சல் தெரிஞ்ச பசங்க தான்..தெரியாம இந்த ஆத்துல வந்து குளிக்க வந்தப்ப தான் ..இந்த சுழல் கிட்ட மாட்டகிட்டாங்க‌இரண்டுபசங்களுக்கும் 21 வயசு தான் ஆகுது.. இதுநால என் தங்கச்சியும் இப்ப இறக்குற நிலமையில இருக்கு.

மேலும் படிக்க: ‘பொன்னி நதி பாக்கணுமே’ - தஞ்சை கல்லணையும் அங்கே அழகாய் பொங்கிவரும் காவிரியின் சிறப்பும்!

தயவு செய்து இனொரு உயிர் பலி வருவதற்கு முன்பு..இந்த இடத்தை முழுவதுமாக தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றுங்கள், அதிக அளவில் விளம்பர பலகையும் வைங்க அய்யா...உங்கள கை எழுத்து கும்புடுரோம்.... மேலும் குடிகாரர்கள் இந்த பாலத்துல குடிச்சிட்டு பாட்டில ஒடச்சு போட்டு போயிராங்க சண்ட போட்டுகிட்டு ஆத்துல விழுந்து இறந்தவங்களும் இருகாங்க.. வட மாநில தொழிலாளிகள்‌ உட்பட 100-ம் மேற்பட்ட இளைஞர்கள் இதில் இறந்துள்ளனர்...தயவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் கூறினார்...

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur