முகப்பு /தஞ்சாவூர் /

அடைமழையிலும் விடாத பக்தி... தஞ்சை பெரிய கோயில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு...

அடைமழையிலும் விடாத பக்தி... தஞ்சை பெரிய கோயில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு...

X
தஞ்சை

தஞ்சை பெரிய கோயில்

Thanjavur News : தை மாத கடைசி வெள்ளியில்  தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷ வழிபாடு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாதந்தோறும் பல்வேறு வகையான சிறப்பு ஆராதனைகள் மற்றும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஏற்கனவே தை மாத மாட்டு பொங்கலில் காய்கறி அலங்காரம் செய்யப்பட்டும். அதனைத்தொடர்ந்து தை மாதம் முதல் பிரதோஷம் என தை மாதத்திலேயே 2 பிரதோஷங்கள் நடைபெற்றது. அந்தவகையில், தை மாத 3ம் வெள்ளியான நேற்று நந்தியம் பெருமானுக்கு பால் மஞ்சள், அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டு பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பிரதோஷ தினமான நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதில் அடைமழையும் பெரிதும் எண்ணாத பக்தர்கள் மழையில் நனைந்தபடியே பிரதோஷ வழிபாட்டில்‌ கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Thanjavur