முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை பெரிய கோயில் நந்தியம் பெருமானின் மெய்சிலிர்க்க வைக்கும் சிறப்புகள்..! 

தஞ்சை பெரிய கோயில் நந்தியம் பெருமானின் மெய்சிலிர்க்க வைக்கும் சிறப்புகள்..! 

X
தஞ்சை

தஞ்சை பெரிய கோயில் நந்தி

Thanjavur Periya Kovil : தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்தியம் பெருமானின் சிறப்பு குறித்த செய்திகுறிப்பு.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர், நீளம் 7 மீட்டர், அகலம் 3 மீட்டர் ஆகும். நந்தி மண்டபம் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கரால் கட்டப்பட்டது.

ஆரம்பத்தில் உள்ள ராஜ ராஜ சோழன் வைத்த நந்தி தற்போது இருக்கும் நந்தியயைவிட சிறியது தான் ஆனால் அதற்கு ஒரு கதை உள்ளதாக கூறுகின்றனர். கோயிலில் நுழையும் போது சிவலிங்கம் தெரிய வேண்டும் என்பதற்காக சிறிய அளவிலான நந்தியை ராஜராஜன் அமைத்தார். ஆனால் பின்பு வந்து நாயக்க மன்னர்கள் இவ்வளவு பெரிய கோயிலுக்கு சிறிய நந்தியா என்று தற்போது உள்ள பிரமாண்ட நந்தியம் பெருமானை அமைத்தனர். பின்பு ராஜ ராஜ சோழன் அமைத்த நந்தி கோயில் திருச்சுற்று மாளிகைக்கு‌ இடம் மாற்றப்பட்டது.

நந்தி அமைந்துள்ள மண்டபம் சாதாரண மண்டபமாக இல்லாமல் ஒவ்வொரு தூணிலும் அழகான கற்சிலைகளும் மேல் பகுதியில் ஓவியங்களும் பல கதைகளை எடுத்து சொல்லுவது போல அமைந்துள்ளது‌. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடை கொண்டதாகும். இந்த நந்தியம் பெருமான், லேபாக்ஷி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே 2வது பெரிய நந்தி ஆவார். தற்போது இந்த நந்தியம் பெருமானுக்கு மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷத்தின்போது, பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

தஞ்சை பெரிய கோயில் நந்தி

மேலும் வருடத்தில் ஒரு சில நாட்களில் வரும் சனிப்பிரதோஷம் மிகவும் விசேஷமாக கருதப்படுவதால், அன்றைய தினம் நந்தியம் பெருமானுக்கு சிறப்பாக அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நந்தியம் பெருமானை வழிபடுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் நாளன்று கோயிலில் 108 கோ பூஜை நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் நந்தியம் பெருமானுக்கு டன் கணக்கில் காய்கறிகள், பழங்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    First published:

    Tags: Local News, Thanjavur