கர்நாடகாவில் மாநில அளவில் நடக்கும் நடன போட்டியில் பங்கேற்க தஞ்சை மாவட்டத்திலேயே மனோஜிபட்டியில் உள்ள ஆதிதிராவிடர் நல அரசு உயர்நிலை பள்ளி மாணவிகள் தேர்வாகி அசத்தியுள்ளனர்.தஞ்சை மனோஜ் பட்டியில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் மாணவர்களுக்கு படிப்பையும் கடந்து கலை மற்றும் விளையாட்டு துறைகளிலும் பயிற்சியும் ஒத்துழைப்பும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 9 பேர் நடனத்தில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தனர். பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவிகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க வைத்து அவ்வபோது ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில் மாணவர்களும் பல்வேறு இடங்களில் நடந்த போட்டிகளில் ஆசிரியர்களின் துணையுடன் கலந்து கொண்டு பல பரிசுகளையும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் நடந்த கலைத் திருவிழாவில் பங்கேற்று இந்த 9 மாணவிகளும் கோலாட்டம், குச்சியாட்டம் மிக சிறப்பாக ஆடி தஞ்சை மாவட்டத்திலேயே முதலிடமும் பெற்றுள்ளனர். இதன் எதிரொலியாக மாநில அளவில் கர்நாடகாவில் நடக்கும் நடன போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.
மேலும் படிக்க : கணகனேரியில் படகு சவாரி மீண்டும் துவங்கப்படுமா.. ஏக்கத்தில் புதுச்சேரி மக்கள்!
கர்நாடகாவில் நடக்கும் கலாசார பெருந்திரளணி விழா:
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடம் மாவட்டத்திலுள்ள மூடுபிரியில் பாரத சாரண, சாரணிய அமைப்பின் பன்னாட்டு கலாசார பெருந்திரளணி விழா டிசம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், 18 நாடுகளைச் சேர்ந்த சாரண, சாரணிய மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பில் மனோஜிபட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த சாரணிய மாணவிகளான 10 ஆம் வகுப்பைச் சேர்ந்த வைஷ்ணவி, ராகவி, லோகேஸ்வரி, 9 ஆம் வகுப்பைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, யுவஸ்ரீ, எழிலரசி, ஹர்ஷினிசரோ, நேத்ரா, சுஜா ஆகிய 9 பேர் கோலாட்டம், கும்மியாட்டத்தில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளனர்.
மேலும் படிக்க : ரூ.25,000 சம்பளம்... புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை... எக்ஸாம் இல்லை - உடனே விண்ணப்பியுங்கள்
இந்த மாணவிகள் ஏற்கெனவே மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு கலை விழாக்களில் பங்கேற்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் இவர்களை தமிழ்நாடு பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட முதன்மைஆணையரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருமான எம்.சிவக் குமார், மாவட்டக் கல்வி அலுவலரும், மாவட்ட சாரண ஆணையருமான கோவிந்தராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்துள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு சாரண இயக்க மாவட்டச் செயலரும், பள்ளித் தலைமையாசிரியருமான சந்திரமௌலி வாழ்த்து தெரிவித்தார்.
டிசம்பர் 21-27 தேதி கர்நாடகாவில் நடக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்க மாணவிகள் தினம் தோறும் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கோலாட்டம், கும்மியாட்டம் இந்த இரண்டு நடனத்திலும் மிகச் சிறப்பாக நடனம் ஆடி மாவட்ட அளவில் தேர்ச்சி ஆகியுள்ள இந்த ஒன்பது மாணவிகளை பள்ளி நிர்வாகம் மற்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதுகுறித்து பேசிய பள்ளியின்தலைமையாசிரியர்: ‘மாணவிகளுக்கு படிப்பையும் தாண்டி அவர்கள் விருப்பப்பட்ட துறையில் மாணவிகளை கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வருவதாகவும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur