தஞ்சாவூர் பழைய ஆட்சியர் அலுவலகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புணரமைக்கப்பட்டு அருங்காட்சியகம், 7டி திரையரங்கம், அரியவகை வெளிநாட்டு பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பறவைகள் பூங்கா டெல்டா பகுதி மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு விருந்து படைத்து வருகிறது.
தஞ்சாவூர் பழைய ஆட்சியர் அலுவலகம்:
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை, பிரிட்டிஷ் கட்டட வல்லுனர் ராபர்ட் சிஷோலம் என்பவரால் 1896 முதல் 1900 ஆண்டு காலத்தில் கட்டப்பட்டது.இந்தோ--சராசனிக் கட்டடக் கலைபாணியை சார்ந்த இந்த கட்டடத்தில், 120 ஆண்டுகளாக, தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.
தஞ்சாவூர் - திருச்சி- தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகம், 2015 முதல் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, பழையஆட்சியர்அலுவலக கட்டடத்தை பாதுகாத்து, அருங்காட்சியகமாக மாற்ற நிர்வாகம் முடிவு செய்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 8.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் வேளாண் துறை சார்பில் பழமையான வேளாண் கருவிகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளின் செயல்பாடுகள் குறித்த தத்ரூபமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில், நவதானியங்கள், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட பெரிய கோவில் மாதிரிகள் உள்ளன.மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால உலோக சிற்ப காட்சியகம், கற்சிற்ப காட்சியகம், சரஸ்வதி மஹால் நுாலக காட்சியகம், '7டி' திரையரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
பறவைகள் பூங்கா:
டெல்டா பகுதி மக்களுக்கு பறவைகளை மொத்தமாக பார்க்கும் இடமாக வடுவூர் பறவைகள் சரணாலயம் இருந்தாலும்சுற்றுலா பயணிகளும் பார்த்து மகிழ 20 நாடுகளை சேர்ந்த 300- க்கும் அதிகமான அரிய வகை பறவைகள் நிறைந்த இராஜாளி பறவை பூங்கா என்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறவைகள் பூங்காவில் உள்ள சிறப்பு என்னவென்றால் பறவைகளுக்கான இந்த உணவை கையில் வைத்து காத்திருந்தால் அதை உண்பதற்கு பறவைகள் வந்து நம் கைகளிலையே நின்று உணவை கொஞ்சம் கொஞ்சமாக நம் கைகளிலிருந்து கொஞ்சி கொத்தி திண்கிறது. இந்த ஒரு அழகான செயல் பூங்காவிற்கு வரும் அணைவரின் மனதையும் நெகிழ வைக்கிறது. குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
இதற்கெல்லாம் டிக்கெட் எவ்வளவு?
அருங்காட்சியகத்தை பார்வையிட பெரியவர்களுக்கு - ரூ.20, சிறுவர்களுக்கு - ரூ.10, 7டி திரையரங்கத்திற்கு 75 ரூபாய், பறவைகள் பூங்காவிற்கு - ரூ.150 , மேலும் 3 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு டிக்கெட் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Birds, Local News, Thanjavur