Home /thanjavur /

தஞ்சை விவசாயிகளே ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க  இவ்வளவு மானியமா? பயன்படுத்திக்கொள்ளுங்கள்

தஞ்சை விவசாயிகளே ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க  இவ்வளவு மானியமா? பயன்படுத்திக்கொள்ளுங்கள்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

Tanjore Farmers | தஞ்சை விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ. 50 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தஞ்சை விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ. 50 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், விவசாயிகளுக்கு 80% மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து நாம் அறிந்து எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்று குறித்து காணலாம்.

இதுகுறித்து பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ராணி வெளியிட்டுள்ள அறிக்கை :

பேராவூரணி வட்டாரத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் நிலையான வருமானம் கிடைத்திட வழிவகை செய்ய தமிழக அரசு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.50,000 மானியம் வழங்க உள்ளது.

இதையும் படிங்க ; தஞ்சாவூர் : சுமார் 500 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் பெரும் சிக்கல்!

பேராவூரணி வட்டாரத்தை சேர்ந்த இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர விரும்பும் விவசாயிகளுக்கு குறைந்தது ஒரு எக்டர் நஞ்சை நிலம் அவரது பெயரில் இருக்க வேண்டும். ஆடு, மாடு, கோழி ஏதும் இல்லாதவராக இருக்க வேண்டும்.

நெல் சாகுபடி செய்ய வேண்டும். தேனீ பெட்டி, பழ மரக்கன்றுகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்படும். மண்புழு உரத் தொட்டி அமைத்து தரப்படும். இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் 2022-23 -ம் ஆண்டில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட திருச்சிற்றம்பலம், வளப்பிரமன்காடு, பின்னவாசல், கல்லூரணிகாடு, தென்னங்குடி, அலிவலம் மற்றும் புனல் வாசல் பஞ்சாயத்துகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இந்த பஞ்சாயத்துகளில் இருந்து 80 சதவீதம் விவசாயிகளுக்கும், மீதமுள்ள பஞ்சாயத்துகளில் இருந்து 20 சதவீதம் விவசாயிகளும் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு மாட்டு கொட்டகை மற்றும் எருக்குழி அவசியம் இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், ஆதார் எண் ஆகியவற்றுடன் பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது அவரவர் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை அணுகி விண்ணப்பித்து கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றவுடன் நேரில் கள ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
First published:

Tags: Local News, Tanjore

அடுத்த செய்தி