தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காராமணி தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவர் பல ஆண்டுகளாக பல வகையான சாகுபடிகளை செய்து வந்த நிலையில் கோழிகொண்டை பூ சாகுபடியும் ஆண்டுதோறும் செய்தார்.
சுமார் ஒரு ஏக்கரில் இந்த கோழி கொண்டை பூ சாகுபடி செய்து வரும் இவர் ஆடி மாதத்தில் கன்று வைத்து மூன்று மாதம் வரை தொடர்ந்து லாபம் பெற்று வருகிறார்.
கோழி கொண்டை பூ, மாலைகளில்அதிக அளவில் பயன்படும். இதற்கான தேவையும் தினமும் இருக்கும். இதனால் இது நஷ்டம் அடையாத சாகுபடியாகவே இருக்கிறது என்கிறார் விவசாயி.
இதையும் படிங்க : பள்ளி கழிவறையில் வீசப்பட்ட பச்சிளம் சிசு.. திருச்சியில் அதிர்ச்சி!
இந்த சாகுபடியில் இவர் ஒரு ஏக்கரில் 3 மாதத்திற்கு 5,000 ரூபாய் மட்டுமே செலவு செய்து 60 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பெற்று வருகிறார். பெரிதளவில் செலவு இல்லை. வாரம் வாரம் உரங்கள் மட்டுமே தெளிக்க வேண்டும். பூச்சி தாக்குதல்களை தடுக்கவே வாரா வாரம் யூரியா தவிர பொட்டாசியம் போன்ற மற்ற உரங்களை பயன்படுத்தலாம்.
ஒரு ஏக்கரில் மூன்று மாதத்தில் சுமார் ஒன்றரை டன் பூ சாகுபடி செய்யும் இவர், மூன்று மாதத்தில் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறைந்த நிலம் வைத்திருப்பவர்கள் என்ன செய்யலாம் என்ற குழப்பம் இருந்தால் பூ சாகுபடி செய்தால் நல்ல லாபம் பெறலாம். அதுவும் செண்டிப் பூவை காட்டிலும் கோழி கொண்டை பூவில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் கூறினார்.
இந்த பூக்களை தஞ்சாவூர் பூ மார்க்கெட்டில்மொத்த விலைக்கு கொடுத்து வருகிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் பூவின் விலை ஏறி இறங்கும் சராசரியாக 50 ரூபாயிலிருந்து அறுபது ரூபாய் வரை பூ விலை சென்றால் 3மாதத்தில் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சில முறை 30, 20, 40 என பூ விலைகுறையவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் நஷ்டமடைய வாய்ப்பில்லை. நிச்சயம் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் கூறினார் இந்த தஞ்சை விவசாயி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore