Home /thanjavur /

மீன் குஞ்சுகள் வளர்ப்பில் இவ்வளவு லாபமா?.. விவசாய நிலத்தில் இப்படி ஒரு வருமானம்.. அசத்தும் தஞ்சை விவசாயி..

மீன் குஞ்சுகள் வளர்ப்பில் இவ்வளவு லாபமா?.. விவசாய நிலத்தில் இப்படி ஒரு வருமானம்.. அசத்தும் தஞ்சை விவசாயி..

தஞ்சாவூர்

தஞ்சாவூர் - மீன் வளர்ப்பு தொழில்

Thanjavur Fish Farming | தஞ்சாவூர் வலம்புரி தெருவை சேர்ந்தவர் விவசாயி பன்னீர் செல்வம் இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மீன் குஞ்சுகள் வளர்ப்பு மூலம் வெகுவான லாபம் பார்த்து வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
விவசாய நிலத்தில் விவசாயம் மட்டும் தான் செய்ய முடியுமா ஏன் மீன் பன்னை வைத்துதான்‌ பார்போமே என்று கடந்த 30 வருடங்களாக மீன் குஞ்சு பன்னை வைத்து லாபம் ஈட்டிவருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த விவசாயி பன்னீர் செல்வம்..

தஞ்சாவூர் வலம்புரி தெருவை சேர்ந்தவர் விவசாயி பன்னீர் செல்வம் இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மீன் குஞ்சுகள் வளர்ப்பு மூலம் வெகுவான லாபம் பார்த்து வருகிறார்.

முதலில் தஞ்சை பகுதிகளில் உள்ள பல குளங்களை குத்தகைக்கு எடுத்து மீன் குஞ்சுகள் வளர்த்து வந்த இவர் மக்களின் ஆதரவு அதிக அளவில் ஏற்பட்டதால் காலம் தாழ்தாமல் சொந்த விவசாய நிலத்தில் குளங்களை அமைத்து மீன் வளர்ப்பிற்கு தேவையான வசதிகளை செய்து, பல வகையான மீன்‌ குஞ்சுகளை உற்பத்தி செய்து வெளி ஊர்கள் மட்டுமன்றி வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்.

விவசாய நிலத்தில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு..


உற்பத்தி செய்யும் மீன் வகைகள்:

கட்லா, ரோகு, மிருகால், புள்ளிகெண்டை, போட்லா ஆகிய மீன்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. பெரிய அளவில் இட வசதி இல்லாததால் மீன்குஞ்சுகளை மட்டும் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறார்கள்.

விவசாய நிலத்தில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு..


மீன்களுக்கு தரும் தீவனங்கள்:

இந்த மீன்களுக்கு கடலை புன்னாக்கு மற்றும், ஆயில் எடுத்த தவுடுகள், மற்றும் கிருமிகளை அழிப்பதற்கு மாட்டு சாணம் அதிக அளவில் பயண்படுத்தப்படுகிறது.

மீன்‌ குஞ்சுகளை விலை மற்றும் வளர‌ ஆகும் காலம்

1.5 இன்ச் இருக்கும் மீன் குஞ்சுகள் 50.பைசாவிற்கு விற்கப்படுகிறது
ஒரு ஏக்கர் நிலத்திற்கு தோராயமாக 3,000-5,000 குஞ்சுகள் வரை விட்டு வளர்க்கலாம். இந்த மீன்கள்‌ வளர 8-10 மாதங்கள் ஆகும்.
மேலும் மீன்கள் மழை காலங்களை காட்டிலும் வெயில் காலத்தில் சற்று அதிக அளவில் உற்பத்தியாகும்.

விவசாய நிலத்தில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு..


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மீன் குஞ்சு வளர்ப்பு குறித்து உரிமையாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், “மீன் வளர்ப்பு தொழிலில் அதிக அளவில் லாபம் ஈட்ட முடியும், இந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இலவசமாக பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் ஆர்வம் உள்ளவர்கள் எண்ணை தொடர்பு கொண்டு பயிற்சி பெறலாம் என்று கூறினார். இவரை 094436 61585 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெறலாம்..
Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி