நம்மாழ்வார், தஞ்சை மண்ணில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை படிப்பைக் கற்றவர். கற்றதை எளிய விவசாயிகளுக்குப் புரியும் மொழியில் உரைத்தார்.
புத்தகங்கள் பல எழுதியவர். அவரின் சிந்தனையும் செயல்பாடும் படித்த இளைஞர்களை இயற்கை வேளாண்மை பக்கம் திருப்பியுள்ளது. இன்று தானிய உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதில் நம்மாழ்வரின் முப்பதாண்டு கால உழைப்பு உள்ளது.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின், நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இயற்கை வேளாண்மை முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட நம்மாழ்வாரின் முயற்சியை, அவரது ஆதரவாளர்கள் தற்போதும் தொடர்கின்றனர்.
இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்மாழ்வாரின் எண்ணமும் நிறைவேற பலர் பாடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருப்பட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி தவச்செல்வன் இன்று நம்மாழ்வாரின் 9 ஆண்டு நினைவு தினமான இன்று மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க : புத்தாண்டை முன்னிட்டு மதுரை மல்லி ரூ.1800க்கு விற்பனை..
நம்மாழ்வார் மீது அதீத பற்று கொண்ட விவசாயி தவச்செல்வன் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தஞ்சாவூர், விதையால் ஆயுதம் செய் அமைப்பில் உள்ள இவர் தஞ்சாவூர் ஜனசேவா தொன்டு நிறுவனம் தலைவி ஷியாமலாவின் மூலம் இன்று நம்மாழ்வாரின் நினைவு தினத்தன்று தவச்செல்வனின் (துளசி இயற்கை விவசாயம்) வயலில் பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பஞ்சகாவியா அமிர்த கரைசல், போன்ற இயற்கை விவசாயம் பற்றிய பல தகவல்களை மாணவர்களுக்கு போதித்தார்.
இதற்காக பெரம்பலூரில் இருந்து தஞ்சை வந்த வேளாண் கல்லூரி மாணவர்கள் பலர் விவசாயியின் அறிவுரைகளை கேட்டு அறிந்து பயன்பெற்றனர்.
செய்தியாளர் : ஆனந்த் - தஞ்சாவூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Tanjore