ஹோம் /தஞ்சாவூர் /

அரை ஏக்கர் நிலத்தில் புடலங்காய் சாகுபடி செய்து லட்சக்கணக்கில் லாபம் பார்க்கும் தஞ்சை விவசாயி!

அரை ஏக்கர் நிலத்தில் புடலங்காய் சாகுபடி செய்து லட்சக்கணக்கில் லாபம் பார்க்கும் தஞ்சை விவசாயி!

X
பாகற்காய்,

பாகற்காய், புடலங்காய் சாகுபடியில் அசத்தும் தஞ்சை விவசாயி

Tanjore District News : குறைந்த நிலத்தில் என்ன செய்வது என்று குழப்பமா இந்த பதிவு உங்களுக்கு தான்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் மரங்குளம் அருகே சின்னையன் குடிகாடு எனும் கிராமத்தில் வெற்றிச்செல்வன் என்ற விவசாயி அரை ஏக்கர் நிலத்தில் புடலங்காய் சாகுபடி செய்து நிறைவான லாபம் பெற்று வருகிறார்.

இதை பற்றி விவசாயிடம் நேரடியாக கேட்டு அறிந்தோம்‌. அப்போது அவர் இந்த புடலங்காய் சாகுபடி பற்றி பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவற்றை பின்வருமாறு காணலாம்:

மற்ற சாகுபடிகளை விட காய்கறி சாகுபடிகளில் மாத வருமானம் கிடைக்கும். நல்ல லாபமும் பெறலாம். அந்த வகையில் இந்த புடலங்காய் சாகுபடி முக்கியமானதாகும்.

இதற்கு முன்பு வாழை, எள், சோளம் என சாகுபடி செய்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த புடலங்காய் சாகுபடியை செய்து வருகிறேன். முன்பு ஒரு ஏக்கரில் இதை செய்து வந்த நிலையில் தற்போது அரை ஏக்கரில் செய்து வருகிறேன்.

விவசாயம் செய்யும் முதல் வழிமுறை :

இதுகுறித்து விவசாயி கூறுகையில், “புடலங்காய், பாகற்காய் விவசாயம் செய்யும் முதல் வழிமுறைக்கு முதலில் நிலப்பரப்பை பதப்படுத்தி விதைகளை நிலத்தில் நட்டு தண்ணீர் மற்றும் இயற்கை உரங்களை தெளிப்பதன் மூலம் 4-வது நாளில் கன்று வளர்ந்து விடும். பிறகு பந்தல்கள் அமைத்து 15வது நாளில் செடிகளை பந்தலுக்கு கீழ் நடவேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க : தஞ்சை சுவாமி மலை முருகன் கோவிலில் கார்த்திகை திருவிழா - நிகழ்ச்சி நிரல்

பந்தல் அமைத்து விவசாயம் செய்யும் முறை : 

மரங்களை நட்டும், கம்பிகளை வளைத்து கட்டியும், பந்தல் போல் அமைத்தும் பந்தலுக்கு கீழ் ஒவ்வொரு செடியினை தனித்தனியாக வைத்து கம்பியில் சனல் கயிற்றுகளை கட்டி செடிக்கு நேராகப்படுமாறு தொங்கவிட வேண்டும்.

மேலும் செடியில் லேசாக முடித்து போடவேண்டும். இதன்மூலம் புடலங்காய் செடியானது சணல் கயிற்றின் மூலம் மேலே பரவி பந்தல் முழுவதுமாக புடலங்காய் கொடியாக உருவாகிறது.

இதன் மூலம் எளிமையான முறையில் எந்த இடையூறும் இல்லாமல் புடலங்காய் காய்த்து தொங்குகிறது. புடலங்காய் மற்றும் பாகற்காய் விவசாயம்‌ செய்வதற்கும் இந்த வழிமுறையைத்தான் பயன்பாடுத்திகிறார்கள் என கூறினார்.

சாகுபடியில் ஆகும் செலவு மற்றும் லாபம் :

புடலங்காய், பாகற்காய் இந்த இரண்டு காய்களையும் விவசாயம் செய்வதற்கு முதல் முறை மற்றும் அதிக செலவு ஆகும். அதாவது பந்தல் அமைப்பதற்கு கிட்டத்தட்ட ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரம் வரை‌ ஆகும்.

பயிரிடப்பட்ட 45வது நாளிலிருந்து அறுவடை செய்யலாம். ஒருமுறை பயிரிடப்பட்ட புடலை 3 மாதங்கள் வரையும் காய்க்கும். இந்த மூன்று மாதத்தில் அரை ஏக்கரில் சாகுபடி செய்து 1.50 செலவுகள் போக ரூ.1 லட்சம் வரை லாபம் பெறுவதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க : தஞ்சை மக்கள் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்... கலெக்டர் தகவல்..

மேலும், ஒரு கிலோ புடலங்காய் மற்றும் பாகற்காய் விதையின் விலை ரூ.18-லிருந்து ரூ.20-ஆக விற்கப்படுகிறது.  அறுவடை செய்த பிறகு ஒரு கிலோ புடலங்காயின் தற்போதைய விலையாக ரூ.20-லிருந்து ரூ.20க்கு வியாபாரிகளிடம் விற்கப்படுவதாகவும் கூறினார்.

குறைபாடுகள் உள்ளதா?

பெரும்பாலும் இயற்கை உரங்களை பயன்படுத்துவதாகும். பூச்சிகள் தாக்குதலுக்குகாக மட்டும் ரசாயன மருந்துகள் பயன்படுத்துவதாகவும் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Agriculture, Local News, Tanjore