ஹோம் /தஞ்சாவூர் /

இயற்கை விவசாயம் செய்து சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி.. அசத்தும் தஞ்சை விவசாயி..

இயற்கை விவசாயம் செய்து சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி.. அசத்தும் தஞ்சை விவசாயி..

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

Thanjavur News | தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருப்பட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தவச்செல்வன் இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் மற்ற அனைவரும் போல் ரசாயன உரங்களை பயண்படுத்தி நெல் சாகுபடி செய்து வந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி தவச்செல்வன் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்து நமது பாரம்பரிய உணவுகளின் நன்மையை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருப்பட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தவச்செல்வன் இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் மற்ற அனைவரும் போல் ரசாயன உரங்களை பயண்படுத்தி நெல் சாகுபடி செய்து வந்த நிலையில் நமது பாரம்பரியமான இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை உணர்ந்து நம்மாழ்வாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு,   பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவுனி, தங்க சம்பா, மாப்பிள்ளை சம்பா என 10 -க்கும் மேற்பட்ட நெல் ரகங்களில் கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வுக்காக பல்வேறு வித்யாசமான நிகழ்வுகளையும் செய்து வருகிறார்.

மாணவர்கள் நடவு நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்:

இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வுக்காக ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளை கொண்டு வயலில் நடவு நட செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும் தவச்செல்வன் குடும்பத்தினர் அணைவரும் இயற்கை விவசாயத்தை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வுக்காக பல்வேறு முயற்சிகளில் ஏற்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

பாரம்பரிய நெல் ரகங்கள்:

மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி,தங்க சம்பா ,காட்டு யானம்,ஆத்தூர் கிச்சடி சம்பா, கொத்தமல்லி சம்பா, என 10 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.

நெல் நாற்று, இடம்: தஞ்சை ஓரத்தநாடு தாலுகா

இயற்கை நெல் சாகுபடிகளை அரசிடம் விற்பனை செய்ய முடியாததால் தற்போது நுகர்வோர் நேரடியாக இயற்கை நெல் ரகங்களின் மகத்துவம் உணர்ந்து விவசாயிகளிடம் இருந்து வாங்க தொடங்கியுள்ளனர், அந்த வகையில் விவசாயி தவச்செல்வன் சாகுபடி செய்யும் நெல்களை நேரடியாக நுகர்வோரிடம் விற்று வருகிறார். அதிலும் ஒரு படி மேல் சென்று சிங்கப்பூர் வரையிலும் நெல்களை ஏற்றுமதி செய்துள்ளார்.

மேலும் படிக்க:  கோவை குருந்தமலையில் உருவான ஹிட் திரைப்படங்களின் லிஸ்ட்- மனதை கொள்ளை கொள்ளும் இடம்

மாப்பிள்ளை சம்பா:

அக்காலத்தில் மாப்பிள்ளைகள் இளவட்டங்கள் தூக்குவதற்கு இந்த மாப்பிள்ளை சம்பா கஞ்சியை 48 நாட்கள் குடித்து தான் இளவட்டங்கள்ளை. தூக்கினார்கள். பாரம்பரிய நெல் ரகமானது உடலுக்கு சத்துக்களை தருவதோடு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது..

நெல் நாற்று, இடம்: தஞ்சை ஓரத்தநாடு தாலுகா

இயற்கை விவசாயத்தில் குறைவான செலவு:

இயற்கை விவசாயம் என்பது இடுபொருட்களை பயன்படுத்தாமல் முழுவதும் இயற்கை உரங்களை கொண்டு பாரம்பரிய விதைகளை பயன்படுத்தி செய்யும் சாகுபடி முறையாகும், அந்த வகையில் நெல் சாகுபடியில் ரசாயன உரங்களை பயண்படுத்தி தற்போது அணைவரும் செய்து வரும் நெல் சாகுபடிகளை விட இயற்கை விவசாயத்தில் செலவு குறைவாகத்தான் இருக்கிறது.

மேலும் படிக்க :  வேண்டியோருக்கு வேண்டும் வரங்களை அள்ளி தரும் தஞ்சை நீலமேக பெருமாள் கோயில் சிறப்புகள்!

ஆடு மாடுகளில் இருந்து வரம் சாணம் கழிவுகள் தான் இயற்கை உரங்களாகும், இதன் மூலம் தயாரிப்பிலும் சில உரங்கள் உள்ளன இவையெல்லாம் பெரிதளவில் செலவுகளை ஏற்றாது, மழை புயல் காலங்களில் கூட கம்பீரமாக நிற்கும் பெரிதளவில் நஷ்டம் ஏற்படாது.

நெல் நாற்று, இடம்: தஞ்சை ஓரத்தநாடு தாலுகா

அரசு ஆதாரிக்க வேண்டும்:

‘நஞ்சில்லா உணவு ஆரோக்கியமான வாழ்க்கை’ என தொடர்சியான ஆரோக்கியமான உணவுகளை உண்ண தொடங்க வில்லை ..இதற்கு ஒரே வழி இயற்கை விவசாயத்தை அரசு ஆதரிக்க வேண்டும் அணைவரும் இயற்கை விவசாயம் செய்ய பரிந்துரைக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் ரேஷன் கடைகளில் பாரம்பரிய நெல் வகைகளை எளிதாக மக்களிடம் கிடைக்கும் படி ஏற்பாடு அரசு நடைமுறை படுத்த வேண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை கொண்ட உணவுகளை வழங்க வேண்டும் என்று விவசாயி தவச்செல்வன் அரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur