ஹோம் /தஞ்சாவூர் /

“செம்பி படம் பார்த்துட்டு கண்ணுல தண்ணியோட தான் வருவீங்க” - தஞ்சை ரசிகர்களின் மூவி ரிவ்யூ

“செம்பி படம் பார்த்துட்டு கண்ணுல தண்ணியோட தான் வருவீங்க” - தஞ்சை ரசிகர்களின் மூவி ரிவ்யூ

X
தஞ்சை

தஞ்சை ரசிகர்கள் கருத்து

Sembi Movie Review : செம்பி படம் குறித்து தஞ்சை ரசிகர்களின் கருத்து.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

இன்று வெளியான செம்பி திரைப்படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் கருத்து என்ன என்று பார்க்கலாம் வாங்க.

பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளாவின் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘செம்பி’. அழகான மலைகிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வீராயின் பேத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறாள். இதனையடுத்து அவர்கள் இருவரும் சொந்த இடத்தை விட்டு, திண்டுகல்லுக்கு செல்லும் பேருந்தில் பயணம் செய்கின்றனர்.

அவர்களை சூழ்ந்த அந்த கொடுமை அவர்கள் செல்லும் வழியெல்லாம் துரத்திக்கொண்டே வருகிறது. இதனிடையே அந்த பேருந்தில் உள்ள சக பயணிகளுள் ஒருவரான வழக்கறிஞர் (அஸ்வின்) இவர்களுக்கு உதவுகிறார்.

இறுதியில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கிடைத்ததா? இல்லையா என்பதற்கான பதிலே செம்பி படத்தின் கதை. இன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : அந்த மனசு தான் சார் கடவுள்..! ஆதரவற்ற குழந்தைகளுக்கு 10,000 வாழைப்பழங்களை இலவசமாக வழங்கிய தஞ்சை விவசாயி..

படத்தை பார்த்த பெரும்பாலோர் சமூக கருத்து நிறைந்த படமாக உள்ளது‌. பலர் உண்ர்ச்சி பூர்வமாக உள்ளது என்றும் புகழ்ந்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், வழக்கறிஞர்கள் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் டிவி அஷ்வின் நன்கு நடித்துள்ளதாகவும், அவர் மேல் ஏற்பட்ட சர்ச்சையில் அவரை பிடிக்காதவர்களுக்கு கூட இப்படம் பிடிக்கும் என்றும் கூறினர்.

செய்தியாளர் : ஆனந்த் - தஞ்சை

First published:

Tags: Local News, Tanjore